ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது
ஜம்மு-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை மூடப்பட்டது
ADDED : ஆக 07, 2011 08:34 PM
ஜம்மு: ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், 300 கி.மீ., நீளமுள்ள ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை, அந்த மாநிலத்தை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கக் கூடியது.
நேற்று இரவு பெய்த கடும் மழை காரணமாக, ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில், டிக்டால் மற்றும் ராம்பன் மாவட்டம், பான்தாய் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அப்பகுதிகளைச் சீரமைக்க முடியாத வகையில், தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், வாகனங்கள் தொடர்ந்து செல்ல முடியாமல், தடை ஏற்பட்டுள்ளதால், தேசிய நெடுஞ்சாலை நேற்று மூடப்பட்டது. <உதாம்பூர், நாக்ரோடா, ராம்பன், பட்னிடாப், பனியால் மற்றும் பாடோடே ஆகிய பகுதிகளில், தேசிய நெடுஞ்சாலையில், 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் சிக்கியுள்ளன. தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளதால், பகல்காம் மற்றும் பால்தாலில் இருந்து, அமர்நாத் புனித யாத்திரை செல்லும் பயணிகள், ராம்பன் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.