Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மயிலுக்கு விஷம்: விவசாயி அதிரடி கைது

மயிலுக்கு விஷம்: விவசாயி அதிரடி கைது

மயிலுக்கு விஷம்: விவசாயி அதிரடி கைது

மயிலுக்கு விஷம்: விவசாயி அதிரடி கைது

ADDED : ஆக 07, 2011 08:21 PM


Google News

ஆத்தூர்: ஆத்தூர் அருகே விவசாய தோட்டத்தில் சுற்றித்திரிந்த இரண்டு ஆண் மயில்களை விஷம் வைத்துக் கொன்ற விவசாயி ஒருவரை, வனத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.

ஆத்தூர் அருகே தம்மம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட கெங்கவல்லி பிரிவு, தெடாவூர் வனப்பகுதியில், மயில்கள் கூட்டம் அதிகளவில் உள்ளது. இந்நிலையில், வீரகனூர் அடுத்த சொக்கனூரை சேர்ந்தவர் விவசாயி சுந்தரம் (37). அவர் பயிர் செய்துள்ள மக்காச்சோள தோட்டத்தில், நேற்று விஷம் கலந்த உணவு வைத்துள்ளார். அதை சாப்பிட்ட மயில்கள், தோட்டத்தில் இறந்து கிடந்துள்ளது. இன்று தகவலறிந்து அங்கு சென்ற வனத்துறையினர், இறந்த மயில்களை கைப்பற்றி, விவசாயி சுந்தரத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us