பத்மநாபசுவாமி கோயிலில் தேவ பிரசன்னம்
பத்மநாபசுவாமி கோயிலில் தேவ பிரசன்னம்
பத்மநாபசுவாமி கோயிலில் தேவ பிரசன்னம்
ADDED : ஆக 07, 2011 06:34 PM
திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் 6வது பாதாள அறையை திறக்க, கடவுளிடம் அனுமதி கேட்டு தேவ பிரசன்னம் பார்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
பத்மநாபசுவாமி கோயிலில் பாதாள அறைகளை திறக்கக்கோரி, சுந்தர்ராஜன் என்பவர் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த சுப்ரீம் கோர்ட் அங்குள்ள 6 அறைகளையும் திறக்க உத்தரவிட்டது. கோயிலின் 5 அறைகளை திறந்த நிலையில், அங்கிருந்து லட்சக்கணக்கான கோடி மதிப்பிலான தங்க வைர நகைகள் கிடைத்தன. இந்நிலையில், பி அறை என்றழைக்கப்படும் 6வது அறையை திறப்பதை நிறுத்த வேண்டும் என திருவனந்தபுரம் மன்னர் குடும்பம் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்தது. இதை பரிசீலித்த கோர்ட், இது தொடர்பாக குழு ஒன்றை அமைத்துள்ளது. இந்நிலையில், 6வது அறையை திறக்க கடவுளின் அனுமதியை கேட்க தேவ பிரசன்னம் பார்ப்பது என்று மன்னர் குடும்பம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் 3 நாட்களுக்கு கோயிலில் தேவ பிரசன்னம் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.