3 பேர் கொலை: அமைச்சர் மீது போலீஸ் வழக்கு
3 பேர் கொலை: அமைச்சர் மீது போலீஸ் வழக்கு
3 பேர் கொலை: அமைச்சர் மீது போலீஸ் வழக்கு
ADDED : ஆக 07, 2011 07:24 AM
லக்னோ:உத்தரபிரதேசத்தில் தனியார் செக்யூரிட்டி வீரர் உள்பட மூன்று பேரை சுட்டுக்கொன்றதாக சம்பவத்தில் தொடர்புடையதாக அம்மாநில அமைச்சர் ஒருவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதசே மாநிலம் ஈட்டா மாவட்டத்தில் ஜெய்த்ரா நகரில் கடந்த ஜூன் 10-ம் தேதியன்று தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டி கார்டாக பணியாற்றிய சந்தோஷ், அவரது உதவியாளர் விஜய்வர்மா, அவரது மகன் மிதுன்வர்மா ஆகியோர் அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட மர்ம ஆசாமிகளால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து சுட்டுக்கொல்லப்பட்ட சந்தோஷின் சகோதரர் அனுரோத் என்பவர் போலீசில் புகார் மனு கொடுத்தார். அதில் துப்பாக்கி சூடு சம்பவத்தில் , பகுஜன்சமாஜ் கட்சியைச் சேர்ந்த கால்நடை பராமரிப்புத்துறை மற்றும் பால்வளத்துறை அமைச்சர் அவத்பால் சிங், அவரது சகோதரர்கள் சந்திரபிரதாப்சீங்,அமர்பால்சிங் ஆகியோருக்கு நேரடி தொடர்புள்ளது என்று தெரிவித்துள்ளார். இப்புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஈட்டா மாவட்ட ஜூடிசியல் மாஜிஸ்திரேட் சந்தோஷ்சாகர், அமைச்சர் அவத்பால்சிங் மற்றும் அவரது சகோதரர்களை கைது செய்யுமாறு உத்தரவிட்டுள்ளார். இதில் அமைச்சர் அவத்பால்சிங் மீது ஏற்கனவே அம்மாநில லோக்ஆயுக்தா அமைப்பு ஊழல் வழக்கு பதிவு செய்துள்ளது.