/உள்ளூர் செய்திகள்/திருச்சி/துறையூரில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசம்துறையூரில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசம்
துறையூரில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசம்
துறையூரில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசம்
துறையூரில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசம்
ADDED : ஆக 06, 2011 02:25 AM
துறையூர்: துறையூரில் அதிகாலை நிகழ்ந்த தீ விபத்தில் கார், ஸ்கூட்டி எரிந்து நாசமானது சோகத்தை ஏற்படுத்தியது.
துறையூரில் கார் நிறுத்தும் நிலையத்திற்கு எதிரே இளங்கோவன் என்பவருக்கு சொந்தமான மகாகணபதி சூப்பர் மார்க்கெட் வளாகம் உள்ளது. இவ்வணிக வளாக கட்டிடத்தின் பின்புறம் உள்ள காலி இடத்தில் பயன்பாடற்ற பொருட்கள் போட்டுவைக்கப்பட்டிருக்கும். இந்த இடத்திற்கு அருகில் குப்பைகளும் போடப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் இளங்கோவனுக்கு சொந்தமான போர்டு ஐகான் காரும், பக்கத்து கடை உரிமையாளர் கணேச ராஜாவின் ஸ்கூட்டியும் அங்கு நிறுத்திச் செல்வது வழக்கம். நேற்று அதிகாலை மூன்று மணிக்கு எதிர்பாராதவிதமாக காலி இடத்திலிருந்த குப்பையில் தீ பிடித்து எரிந்துள்ளது. தீ மளமளவென பரவி கார், ஸ்கூட்டி மற்றும் பொருட்களில் பற்றி எரிந்ததில் பக்கவாட்டு சுவரில் பதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பைப்புகள் தீ பரவ தொடங்கியது. அனைவரும் நன்கு அயர்ந்து உறங்கும் நேரம் என்பதால், தீ பற்றி எரிவது உடனடியாக தெரியவாய்ப்பில்லாமல் போனது. 100 அடி உயரத்துக்கு கொழுந்து விட்டு எரிந்த நெருப்பு வெளிச்சம் கண்டு கார் ஸ்õண்டிலிருந்த கார்களில் படுத்திருந்த டிரைவர்கள் தீப்பற்றி எரிவது குறித்து துறையூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தந்தனர். நிலைய அலுவலர் சின்னசாமி தலைமையில் உடனடியாக வந்த தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். எனினும் காரும், ஸ்கூட்டியும் முற்றிலும் எரிந்து நாசமானது. தீ விபத்து குறித்து தீயணைப்பு துறை கோட்ட அலுவலர் இளங்கோ, துறையூர் போலீஸார், மின்வாரியம், வருவாய் துறையினர், வார்டு கவுன்சிலர் ஆதித்தராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.