/உள்ளூர் செய்திகள்/அரியலூர்/ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 மாணவ, மாணவியர் காயம்ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 மாணவ, மாணவியர் காயம்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 மாணவ, மாணவியர் காயம்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 மாணவ, மாணவியர் காயம்
ஆட்டோ கவிழ்ந்து விபத்து 11 மாணவ, மாணவியர் காயம்
ADDED : ஆக 06, 2011 02:08 AM
ஜெயங்கொண்டம்: ஜெயங்கொண்டம் அருகே பள்ளி மாணவர்கள் சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் 11 பேர் காயமடைந்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே அருள்மொழி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி மாணவ, மாணவியர் பஸ் மூலம் பள்ளிக்கு சென்று வருவது வழக்கம். நேற்று காலை அந்த பகுதியை சேர்ந்த மாணவ, மாணவியர் பஸ்ஸூக்காக காத்திருந்தனர். ஆனால், வந்த பஸ்ஸில் கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவர்களால் பஸ்ஸில் ஏறமுடியவில்லை. வேறு பஸ்ஸூக்காக காத்திருந்தால் பள்ளிக்கு செல்வதில் தாமதமாகும் என்பதால் அவ்வழியாக வந்த சரக்கு ஆட்டோவில் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் ஏறியுள்ளனர். ஆட்டோவை சங்கர் என்பவர் ஓட்டியுள்ளார். சிறிது தூரம் சென்றதும் ஒரு வளைவில் திரும்பிய போது, டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ சாலையில் கவிழ்ந்தது. இதனால், ஆட்டோவில் இருந்த 11 மாணவ, மாணவியர் படுகாயமடைந்தனர். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து மாணவர்களை காப்பாற்றி ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர்களில் ஆண்டாள்(12), காவியா(12), பார்த்திபன்(14), வெற்றிவேல்(15) மட்டும் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறி த்து உடையார்பாளையம் ஆர்.டி. ஓ., நிர்மலா ஜெயங்கொண்டம் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களுக்கு ஆறுதல் கூறினார். தா.பழூர் போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.