இங்கிலாந்து தொடரில் சாதிப்பேன் : கோஹ்லி
இங்கிலாந்து தொடரில் சாதிப்பேன் : கோஹ்லி
இங்கிலாந்து தொடரில் சாதிப்பேன் : கோஹ்லி
ADDED : ஆக 05, 2011 05:54 PM
புதுடில்லி : இங்கிலாந்து தொடரில், தனக்கு அளிக்கப்பட்ட வாய்ப்பை சரியாக பயன்படுத்தி தொடரில் சாதிப்பேன் என்று இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. லார்ட்ஸ் மற்றும் நாட்டிங்ஹாம் தொடரில் படுதோல்வியடைந்த இந்திய அணி 0-2 கணக்கில் பின்தங்கி <<உள்ளது. முன்னணி வீரர்கள் காயம் காரணமாக போட்டிகளில் பங்கேற்க முடியாமல் உள்ளனர். இந்நிலையில், யுவராஜிற்கு பதிலாக, அணியில் கோஹ்லி சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில், பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, அணியில் இடம்பிடித்தது மகிழ்ச்சியளிக்கிறது. தனக்கு கொடுத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அணியை இக்கட்டிலிருந்து மீட்பேன். இந்த தொடரில் சாதிக்க திட்டமிட்டுள்ளேன் என்றும், அதிரடி வீரர் வீரேந்திர சேவக்கும் அணியில் இணைந்திருப்பது அணிக்கு கூடுதல் பலமாக அமையும், எஞ்சிய போட்டிகளை திறம்பட விளையாடி தொடரை சமன் செய்ய இந்திய அணி முயற்சி செய்யும் என்று அவர் கூறினார்.