/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/பழுதான அரசு பஸ்களால் நடுவழியில் தவிப்பு தொடர் அவஸ்தையால் பயணிகள் கொதிப்புபழுதான அரசு பஸ்களால் நடுவழியில் தவிப்பு தொடர் அவஸ்தையால் பயணிகள் கொதிப்பு
பழுதான அரசு பஸ்களால் நடுவழியில் தவிப்பு தொடர் அவஸ்தையால் பயணிகள் கொதிப்பு
பழுதான அரசு பஸ்களால் நடுவழியில் தவிப்பு தொடர் அவஸ்தையால் பயணிகள் கொதிப்பு
பழுதான அரசு பஸ்களால் நடுவழியில் தவிப்பு தொடர் அவஸ்தையால் பயணிகள் கொதிப்பு
ADDED : ஆக 04, 2011 11:37 PM
சிவகங்கை:மதுரை-சிவகங்கை வழியாக இயக்கப்படும் பழுதான பஸ்களால் பயணிகள் நடுவழியில் தவிக்கும் நிலை தொடர்கிறது.மதுரையில் இருந்து அரசு ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்கள், வியாபாரிகள் உட்பட பலர் சிவகங்கை, தொண்டி, சூராணம், இளையான்குடிக்கு தினமும் பஸ்களில் வருகின்றனர். இந்த பகுதிக்கு செல்லும் பஸ்களில் அதிக கலெக்சனும் உண்டு.காலை நேரத்தில் இந்த தடத்தில் இயக்கப்படும் பஸ்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்களின் நிலையை போக்குவரத்து நிர்வாகம் ஏனோ கண்டு கொள்வதில்லை. நேற்று முன்தினம் மதுரையிலிருந்து சூராணம் சென்ற அரசு பஸ் நடுவழியில் டயர் பஞ்சர் ஆனது. கூட்டம் அதிகமாக இருந்ததால் பயணிகளை இறக்கி விடமுடியாமல், ஒரு வழியாக மெதுவாக சிவகங்கை (மதுரை முக்கு) வரை இயக்கப்பட்டு பயணிகள் இறக்கி விடப்பட்டனர்.சூராணம் செல்ல வேண்டிய பயணிகள் பஸ் இல்லாமல் தவித்தனர்.
மதுரையிலிருந்து நீண்ட தூரம் சிவகங்கை வழியாக இயக்கப்படும் அனைத்து பஸ்களின் நிலையும் மிக மோசம். பஸ்சின் உட்பகுதி இருக்கைகளில் அமர்ந்து செல்ல முடியாத அளவிற்கு தூசியும், பஸ் முழுவதும் புழுதி மணலும் ஆங்காங்கே குவியலாக இருந்தாலும் அதனை அகற்ற போக்குவரத்து கழக ஊழியர்கள் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. மதுரையில் இருந்து அரசனூர்,படமாத்தூர் வரை தாழ்தள சொகுசு பேருந்து இயக்கப்படுகிறது. இந்த பஸ்சை கூடுதலாக 13 கி.மீ., தூரம் உள்ள சிவகங்கை வரை இயக்கலாம். டவுன் பஸ்களை குறிப்பிட்ட தூரம் தான் வரை தான் இயக்க வேண்டும் என்ற விதிமுறையில் தளர்வு செய்து சிவகங்கை வரை தாழ்தள பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர். இதற்கான முயற்சியில் சிவகங்கை எம்.எல்.ஏ., குணசேகரன் இறங்கி இந்த வசதியை செய்துதர வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.பயணி ஒருவர் கூறுகையில், ''இந்த வழித்தடத்தில் செல்லும் பஸ்கள் குறிப்பிட்ட நேரத்தில் செல்வதில்லை.பல மாதங்களாக பஸ்சை சுத்தம் செய்யாத நிலை உள்ளது.இந்த வழியாக செல்லும் அனைத்து தனியார் பஸ்களிலும் அனைத்து வசதிகளும் உள்ளதால் அதிக அளவில் கூட்டமும் செல்கிறது. மாற்றாக மதுரையில் இருந்து தாழ்தள பஸ்சை பூவந்தி வரையிலும், பூவந்தியில் இருந்து சிவகங்கை வரை இயக்கலாம்.பஸ்சை முறையாக பராமரிக்காததால் பயணிகள் தனியார் பஸ்களையே அதிகம் விரும்புகின்றனர் என்றார்.