ADDED : ஆக 03, 2011 10:18 PM
சங்கராபுரம் : தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க நாள் கொடியேற்று விழா சங்கராபுரத்தில் நடந்தது.
சங்கராபுரம் வட்ட தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் இயக்க நாள் கொடியேற்று விழா மற்றும் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கராபும் உதவி கல்வி அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர் அன்பழகன் முன்னிலை வகித்தார். வட்டார செயலாளர் வரவேற்றார். மாநில செயற்குழு உறுப்பினர் குணசேகரன் கொடியேற்றினார்.
இந்த ஆண்டே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும். புதிய தன் பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். ஒளிவு மறைவற்ற ஆசிரியர் கலந்தாய்வு முறையை தொடர்ந்து அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட 5 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். மாநில பொதுக்கழு உறுப்பினர் மணி, ராஜேந்திரன், வட்ட துணை தலைவர் தேவராஜன், துணை செயலாளர் சங்கரன், அமுதா, ராஜா, ரமேஷ்குமார், தலைமை ஆசிரியர் அருளப்பன் உட்பட பலர் பேசினர். வட்டார பொருளாளர் தங்கராசு நன்றி கூறினார்.