/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வேங்கூர் காலனி மக்களுக்கு மலேரியா கண்டறியும் முகாம்வேங்கூர் காலனி மக்களுக்கு மலேரியா கண்டறியும் முகாம்
வேங்கூர் காலனி மக்களுக்கு மலேரியா கண்டறியும் முகாம்
வேங்கூர் காலனி மக்களுக்கு மலேரியா கண்டறியும் முகாம்
வேங்கூர் காலனி மக்களுக்கு மலேரியா கண்டறியும் முகாம்
ADDED : ஆக 03, 2011 10:15 PM
திருக்கோவிலூர் : வேங்கூர் காலனியில் மலேரியா மற்றும் காசநோய் கண்டறியும் முகாம் நடந்தது.
திருக்கோவிலூர் அடுத்த ஜி.அரியூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் சார்பில் வேங்கூர் காலனியில் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் நடந்த முகாமிற்கு வட்டார மருத்துவ அலுவலர் சுந்தரபாண்டியன் தலைமை தாங்கினார். டாக்டர்கள் சிவக்குமார், பூபேஷ், பிரபாகரன் அடங்கிய மருத்துவக் குழுவினர் பொதுமக்கள் 204 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டனர். கடந்த ஓர் ஆண்டில் இக்கிராமத்தில் மலேரியா நோய் 21 பேருக்கும், காச நோய் 8 பேருக்கும் கண்டறியப் பட்டது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு பரிசோதனை மேற்கொள்ளப் பட்டது.
முகாமில் சுகாதார மேற்பார்வையாளர் சேகர், ஆய்வாளர்கள் முருகன், சீனுவாசன், சரவணன், சதீஷ்பாபு, கிராமநல செவிலியர் ஜெயந்தி, மருந்தாளுநர் நிர்மலா, ஆய்வக உதவியாளர்கள் ஆறுமுகம், ஆல்பர்ட் ஆரோக்கியராஜ் கலந்து கொண்டனர்.