/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/தி.மு.க., போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்புதி.மு.க., போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
தி.மு.க., போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
தி.மு.க., போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
தி.மு.க., போராட்டத்தால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : ஆக 02, 2011 12:54 AM
விழுப்புரம் : விழுப்புரத்தில் தி.மு.க., வினர் நடத்திய போராட்டத்தால்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.தி.மு.க., வினர் மீது பொய் வழக்குப் போடுவதை
கண்டித்து மற்றும் சமச்சீர் கல்வியை அமல்படுத்தக் கோரி மாவட்ட தி.மு.க.,
சார்பில் விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு போலீஸ் தரப்பில் அனுமதி மறுக் கப்பட்டதாக கூறப்பட்டாலும், பழைய பஸ்
நிலையத்தில் போராட்டம் நடத்த இடம் ஒதுக்கி கொடுத்திருந்தனர்.டி.எஸ்.பி.,
சேகர் தலை மையில் ஏராளமான போலீ சார் பாதுகாப்பு பணியில்
ஈடுபட்டிருந்தனர்.மேடை ரோட்டின் ஓரத்திலேயே அமைக்கப்பட்டிருந்தால்
போராட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
கைது செய்யப்பட்டவர்களை ஏற்றிச் செல்ல தேவையான வாகன வசதியும் போலீசார் முன்
கூட்டியே செய்யவில்லை. அந்த வழியாக வந்த அரசு பஸ்களை நிறுத்தி, பயணிகளை
கீழே இறக்கிவிட்டு தி.மு.க.,வினரை ஏற்றிச் சென்றனர். இதனால் பயணிகள்
மிகுந்த அவதிக்கு ஆளாகினர்.விழுப்புரம்-திருச்சி நெடுஞ்சாலையில் போலீஸ்
வாகனங்களும், தி.மு.க.,வினரின் வாகனங்களும் ஆக்கிரமித்து நின்றதால்
போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இனி வரும் காலங்களில் போராட்டம்,
ஆர்ப்பாட்டம் நடத்தினால் அனைத்து முன் ஏற்பாடுகளையும் போலீசார் செய்து
வைத்தால் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தலாமே.