"ஆன்-லைனில்' அனுப்பாததால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்க மறுப்பு: போலீஸ் அதிர்ச்சி
"ஆன்-லைனில்' அனுப்பாததால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்க மறுப்பு: போலீஸ் அதிர்ச்சி
"ஆன்-லைனில்' அனுப்பாததால் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் ஏற்க மறுப்பு: போலீஸ் அதிர்ச்சி
மதுரை: பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்பாமல், தபாலில் அனுப்பியதால், நூற்றுக்கணக்கான விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகம் திருப்பி அனுப்பியுள்ளதால் போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
மதுரை கோச்சடையில் ஜூன் 30 முதல், பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்க தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது. முன்பு, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு, சரிபார்ப்பு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. ஆய்வுக்கு பின், அந்த விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புவர். இதை தவிர்க்க, சரிபார்ப்பு விண்ணப்பங்களை, தபாலில் அனுப்பாமல், ஆன்-லைனில் கேட்கப்படும் விபரங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்து அனுப்ப போலீசாருக்கு பாஸ்போர்ட் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்குரிய வசதி இன்னும் போலீஸ் பாஸ்போர்ட் பிரிவில் ஏற்படுத்தவில்லை. இதனால் சேவை மையத்திலிருந்து பாஸ்போர்ட் அலுவலகத்திற்கும், அங்கிருந்து போலீசாருக்கும் விண்ணப்பம் அனுப்பப்படுகிறது. இந்த நடைமுறையால், பாஸ்போர்ட் கிடைக்க குறைந்தது மூன்று வாரங்களாகின்றன.
போலீசார் கூறியதாவது: ஆன்-லைனில் அனுப்ப இதுவரை எந்த வசதியும் எங்களுக்கு செய்துதரவில்லை. பலமுறை நினைவூட்டல் கடிதம் எழுதிவிட்டோம். இதற்கிடையே தபாலில் அனுப்பிய பல நூறு விண்ணப்பங்களை, ஆன்-லைனில்தான் அனுப்ப வேண்டும் என பாஸ்போர்ட் அலுவலகம் எங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளது. ஆக.,3 அல்லது 4ம் தேதி ஆன்லைன் வசதி ஏற்படுத்தி தருவதாக பாஸ்போர்ட் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர், என்றனர்.