Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு

மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி விகிதம் குறைப்பு

ADDED : ஆக 01, 2011 04:27 AM


Google News

தேனி:தமிழக அரசு கூட்டுறவுத்துறை மூலம் விவசாயிகளுக்கு பயிர்க்கடன், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு தொழிற்கடன், உதவிகளை வழங்கி வருகிறது.

அதே போல் கடந்தாண்டு முதல் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறு தொழில் மற்றும் தொழிற்கடன் உதவிகளை வழங்கி வருகிறது. இவர்கள் பெறும் கடனுக்கு 6 சதவீதம் வட்டி வசூலிக்கப் பட்டு வந்தது. தற்போது இந்த வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளில் ஆண்களுக்கு 5 சதவீதம் வட்டியும், பண்களுக்கு 4 சதவீதமும் வசூலிக்க உத்தரவிடப் பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான சிறுதொழிற்கடன் வட்டி விகிதம் குறைக்கப் பட்டுள்ளதால், அவர்கள் கடன் பெறும் வாய்ப்பு அதிகரித்துள்ளதாக கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us