ADDED : ஆக 01, 2011 02:41 AM
புதுச்சேரி : கள விளம்பர அலுவலகம், சாரதா கங்காதரன் கல்லூரி, தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய சங்கம் இணைந்து மருத்துவ மூலிகைகள் குறித்த விழிப்புணர்வு முகாம், கல்லூரி வளாகத்தில் நடந்தது.முகாமிற்கு கல்லூரி முதல்வர் சீனிவாசன் தலைமை தாங்கினார்.
திருநெல்வேலி வர்ம வைத்தியர் முருகேசன், கோவில்பட்டி நாராயணன், என்.எஸ்.எஸ்., அலுவலர் ரவிசங்கர் ஆகியோர் கருத்துரை வழங்கினர். மூலிகைகள் குறித்த விவாத அரங்கில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, புதுச்சேரி மண்டல சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலைய பொறுப்பு அதிகாரி டாக்டர் மாசிலாமணி பரிசு வழங்கினார். கள விளம்பர அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.தமிழ்நாடு பாரம்பரிய சித்த வைத்திய மகா சங்க மாநிலத் தலைவர் அர்ச்சுனன், உணவே மருந்து, மருந்தே உணவு என்ற தலைப்பில் பேசினார். நிகழ்ச்சியில், பாஸ்கரன், செல்வம் ஆகியோர் 70க்கும் மேற்பட்ட மூலிகைகள் கொண்ட கண்காட்சியை அமைத்திருந்தனர்.