/உள்ளூர் செய்திகள்/மதுரை/ஐகோர்ட் கிளைக்கு கூடுதல்நீதிபதிகள்: மகா கோரிக்கைஐகோர்ட் கிளைக்கு கூடுதல்நீதிபதிகள்: மகா கோரிக்கை
ஐகோர்ட் கிளைக்கு கூடுதல்நீதிபதிகள்: மகா கோரிக்கை
ஐகோர்ட் கிளைக்கு கூடுதல்நீதிபதிகள்: மகா கோரிக்கை
ஐகோர்ட் கிளைக்கு கூடுதல்நீதிபதிகள்: மகா கோரிக்கை
ADDED : ஆக 01, 2011 02:04 AM
மதுரை:மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், கூடுதல் நீதிபதிகளை நியமிக்க வேண்டும் என 'மகா' வக்கீல்
சங்கம் வலியுறுத்தியது.சங்க செயலாளர் கே.பி.தியாகராஜன், தலைமை நீதிபதி
எம்.யூசுப் இக்பாலிடம் வழங்கிய மனு:ஐகோர்ட் நீதிபதிகள் நியமனத்தில் ஐகோர்ட்
கிளை வக்கீல்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும். வக்கீல்கள்-நீதிபதிகள்
இடையே அடிக்கடி பேச்சுவார்த்தை நடத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கோர்ட்டுகளில் விதிக்கப்படும் அபராதம், நஷ்டஈடுகளில் 50 சதவீதத்தை பார்
அசோசியேஸன் நல நிதிக்கு ஒதுக்க வேண்டும். ஐகோர்ட் கிளையில் தற்போது 12
நீதிபதிகள் மட்டும் பணி
புரிகின்றனர். வழக்குகள் அதிகளவில் தாக்கல் ஆவதால், இவர்களின் எண்ணிக்கையை
16 ஆக உயர்த்த வேண்டும். ஐகோர்ட்டில் தமிழை அலுவல் மொழியாக்க நடவடிக்கை
எடுக்கப்பட வேண்டும், என கூறியுள்ளார்.