வங்கிகளாக மாறுகின்றன தபால் நிலையங்கள்அமைச்சர் கபில் சிபல் தகவல்
வங்கிகளாக மாறுகின்றன தபால் நிலையங்கள்அமைச்சர் கபில் சிபல் தகவல்
வங்கிகளாக மாறுகின்றன தபால் நிலையங்கள்அமைச்சர் கபில் சிபல் தகவல்
ADDED : ஜூலை 31, 2011 10:55 PM

புதுடில்லி:''தபால் துறையை வர்த்தக ரீதியாக மாற்ற விரும்புகிறோம். தபால்
அலுவலகங்களை எல்லாம் வங்கிகளாக மாற்ற விரும்புகிறோம். இதன் மூலம் சாதாரண
நபர்கள், 10 ரூபாயில் கணக்கு துவக்க முடியும். தபால் நிலையங்களை வங்கிகளாக
மாற்ற, ரிசர்வ் வங்கியின் அனுமதியையும் கேட்க உள்ளோம்,'' என, மத்திய தொலைத்
தொடர்புத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
மத்திய மனிதவள
மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் கூறியதாவது:
வெளிநாட்டு முதலீட்டை கவரும் நாடுகளில், முக்கிய இடத்தை வகித்து வந்த
இந்தியா, ஸ்பெக்ட்ரம் ஊழல், காமன்வெல்த் ஊழலால், முதலீட்டை ஈர்க்கும்
நாடுகளில், 14வது இடத்துக்கு தள்ளப்பட்டு விட்டது. இது போன்ற ஊழல்களால்
வெளிநாட்டு முதலீட்டாளர்கள், நம் நாட்டில் முதலீடு செய்யத் தயங்குகின்றனர்.
இருப்பினும், இது தற்காலிகமான சூழ்நிலை தான்.மேற்கண்ட ஊழல்களால்
நம்நாட்டின் கவுரம் கெட்டதோடு, 45 ஆயிரம் கோடி முதல், 1 லட்சத்து, 25
ஆயிரம் கோடி ரூபாய் வரை அன்னிய முதலீடு குறைந்து விட்டது.உலகிலேயே
கவர்ச்சிகரமான சந்தையாக இந்தியா உள்ளதால், இந்த நிலை மாறிவிடும். எனவே,
வெளிநாட்டு முதலீடு குறைந்தது பற்றி நான் கவலைப்படவில்லை. வெளிநாட்டு
முதலீடு குறைந்ததற்கும், பெயர் கெட்டுப் போனதற்கும் நாம் தான் காரணம்.தபால்
துறையை வர்த்தக ரீதியாக மாற்ற விரும்புகிறோம். தபால் அலுவலகங்களை எல்லாம்
வங்கிகளாக மாற்ற விரும்புகிறோம். இதற்கான ரிசர்வ் வங்கியின் அனுமதியையும்
கேட்க உள்ளோம். இதன் மூலம், சாதாரண நபர்கள், 10 ரூபாயில் வங்கிக் கணக்கு
துவக்க முடியும். தபால் அலுவலகங்கள் வங்கிகளாக மாறினால், அதன் பின், தபால்
துறை மூலம் ஏ.டி.எம்., மிஷின்களை நிறுவ முடியும். ஸ்டேட் பாங்க் ஆப்
இந்தியாவால் நாடு முழுவதும் கிளைகள் அமைக்க முடியாது. நாடு முழுவதும் தபால்
நிலையங்கள் இருப்பதால், உள்கட்டமைப்பு செலவுகள் அதிகம் இல்லாமல், அவற்றை
வங்கிகளாக செயல்பட வைக்கலாம்.இவ்வாறு கபில் சிபல் கூறினார்.