ஆக., 2ல் மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் ஆணை
ஆக., 2ல் மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் ஆணை
ஆக., 2ல் மேட்டூர் அணை திறப்பு : முதல்வர் ஆணை
ADDED : ஜூலை 28, 2011 09:34 PM
சென்னை : 'விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து, வரும் 2ம் தேதி முதல், 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும்' என, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா அறிக்கை: மேட்டூர் அணையிலிருந்து, மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய் பாசனத்திற்காக ஆக., 1 முதல் தண்ணீர் திறக்க, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளிடமிருந்து எனக்கு கோரிக்கைகள் வந்துள்ளன. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, மேட்டூர் அணையிலிருந்து மேட்டூர் கிழக்கு மற்றும் மேற்குக் கரை கால்வாய்களில் நடப்பாண்டு பாசனத்திற்காக, வரும், ஆக., 2ம் தேதி முதல், 137 நாட்களுக்கு தண்ணீர் திறந்து விடப்படும். இதனால், ஈரோடு மாவட்டத்தில், 17 ஆயிரத்து, 230 ஏக்கரும், சேலம் மாவட்டத்தில், 16 ஆயிரத்து, 443 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில், 11 ஆயிரத்து, 327 ஏக்கர் நிலங்கள் உட்பட மொத்தம், 45 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இவ்வாறு, முதல்வர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


