/உள்ளூர் செய்திகள்/மதுரை/கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவிகள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
கள்ளக்காதலை கண்டித்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி
ADDED : ஜூலை 28, 2011 03:29 AM
உசிலம்பட்டி : உசிலம்பட்டியில்,கள்ளக்காதலை கண்டித்த கணவரை கள்ளக்காதலனுடன்
சேர்ந்து கூலிப்படை வைத்து கொலை செய்து விட்டு, மர்மநபர்கள் தன்னை
கட்டிப்போட்டு கணவனை கொலை செய்து ஐந்துலட்சரூபாய் பணத்தை திருடிச்சென்றதாக
நாடகமாடிய பெண்ணை போலீசார் கைது செய்தனர். கள்ளக் காதலனையும், கூலிப்
படையினரையும் தேடிவருகின்றனர்.உசிலம்பட்டி கீழப்புதூர் நேதாஜி நகரில்
வசித்து வருஉஊ வேலு(40), கட்டிடங்களுக்கு சென்ட்ரிங் பலகை அடிக்கும்
கான்ட்ராக்டர். இவருக்கு செல்வி (38) என்ற மனைவியும் திவ்யா(12), மோனிஷா
(10) இரண்டு மகள்களும் ஸ்ரீதர் (6)என மகனும் உள்ளனர். நேற்று முன்தினம்
இரவு சுமார் 2.00 மணியளவில் வீட்டின் கதவு தட்டப்படும் சத்தம்கேட்டு எழுந்த
நான் கதவை திறந்தவுடன் நான்கு மர்மநபர்கள் வீட்டிற்குள் புகுந்து,
கட்டிப்போட்டு விட்டு எனது கணவர் வேலுவை கொலை செய்து பீரோவில் இருந்த ஐந்து
லட்சம் ரூபாயை திருடிச்சென்று விட்டனர் என செல்வி உசிலம்பட்டி
போலீசார்களிடம் கூறினார்.
குமார், எஸ்.பி. அஸ்ராகார்க் மற்றும்
டி.எஸ்.பி.குமார் போலீசார் விசாரணை நடத்தினர். கொலை நடந்த வீட்டில்
தடயவியல் வல்லுநர்கள் ஆய்வு மேற்கொண்டனர். 'மோப்பநாய்' அழகர் கொலை நடந்த
இடத்தில் இருந்து மதுரை தேனி மெயின் ரோட்டில் கண்ணன் தியேட்டர் அருகில்
உள்ள பெட்ரோல் பங்க் வரை வந்து நின்றது.காட்டிக்கொடுத்த பூ: கொலை நடந்த
விதமும், செல்வியின் நடவடிக்கைகளும் அவர்மீது போலீசார்களுக்கு சந்தேகத்தை
ஏற்படுத்தியது. கொலைசெய்ய வந்தவர்கள் தனது தலை முடியை கொத்தாக பிடித்து
சத்தம்போடாமல் செய்து கட்டிப்போட்டனர் என செல்வி கூறினார்.
ஆனால்,
முதல்நாள் இரவில் அவரது தலையில் வைத்திருந்த மல்லிகை பூ எந்த வித
பாதிப்பும் இல்லாமல் இருந்தது. மேலும்,திருடர்கள் செல்வியின் கழுத்தில்
இருந்த செயினை பறிக்காமல் போனதும், கணவர் கொலை செய்யப்பட்டுக்கிடக்கும்
நிலையில் அதற்கான பதட்டம் ஏதும் இல்லாமல் இருந்ததும், முன்னுக்குப்பின்
முரணாக கூறியதும் கொலையில் செல்வியும் சம்பந்தப்பட்டிருக்காலம் என
போலீசார்களின் சந்தேகத்திற்கு மேலும் வலு சேர்த்தது.கள்ளக்காதல்: போலீசார்
செல்வியிடம் விசாரணை நடத்தியபோது, தனக்கும் நேதாஜி நகரைச் சேர்ந்த கரிகாலன்
என்பவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டதாகவும், இதனை கணவர் வேலு
கண்டித்ததால் அவரை கொலை செய்ய இருவரும் சேர்ந்து திட்டமிட்டதாகவும்
போலீசில் ஒப்புக்கொண்டார். இருவரும் சேர்ந்து வேலுவை கொலை செய்ய பணம்
கொடுத்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்ததாகவும் போலீசார்களிடம்
தெரிவித்தார். செல்வி கூறிய தகவல்களை வைத்து போலீசார் கரிகாலனையும்,
கொலையில் ஈடுபட்ட கூலிப்படையினரையும் தேடி வருகின்றனர். முதல் முயற்சி
தோல்வி?: கடந்த சில நாட்களுக்கு முன் வேலு வாலாந்தூர் அருகே மோட்டார்
சைக்கிளில் சென்றபோது அந்த வழியாக வந்த கார் மோதி அவரை இடித்து கீழே
தள்ளியது. இது குறித்து வாலாந்தூர் போலீசில் விசாரணை நடத்தினர். கார்
டிரைவர் தான் தெரியாமல் அவர்மீது இடித்துவிட்டதாக கூறியதால் அப்போதைக்கு
சாதாரண விபத்து போல் போலீசார் சமரசம் பேசி அனுப்பிவிட்டனர். இந்த விபத்து
திட்டமிட்டு வேலுவை கொலை செய்ய நடந்த முயற்சியா? என்பது குறித்தும்
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.