/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கிரிக்கெட் பேட் செய்ய பயன்படும் வில்லோ மரக் கன்றுகள் வளர்ப்புகிரிக்கெட் பேட் செய்ய பயன்படும் வில்லோ மரக் கன்றுகள் வளர்ப்பு
கிரிக்கெட் பேட் செய்ய பயன்படும் வில்லோ மரக் கன்றுகள் வளர்ப்பு
கிரிக்கெட் பேட் செய்ய பயன்படும் வில்லோ மரக் கன்றுகள் வளர்ப்பு
கிரிக்கெட் பேட் செய்ய பயன்படும் வில்லோ மரக் கன்றுகள் வளர்ப்பு
ADDED : ஜூலை 27, 2011 11:47 PM
புதுச்சேரி : கிரிக்கெட் பேட் செய்வதற்கு பயன்படுத்தப்படும் வில்லோ மரக் கன்றுகள், பரிசோதனை முயற்சியாக புதுச்சேரியில் வளர்க்கப்படுகிறது.எடை குறைவாகவும், அதேசமயம் உறுதியாகவும் உள்ள வில்லோ மரங்கள், கிரிக்கெட் பேட் செய்வதற்கு பயன்படுத்தப்படுகின்றன.
இந்த வகை மரங்கள் கொடைக்கானல் போன்ற குளிர் பிரதேசங்களில் செழித்து வளர்கின்றன வில்லோ மரக் கன்றுகள் புதுச்சேரி குரும்பாப்பட்டில் உள்ள காமராஜர் வேளாண் அறிவியல் மையத்தில் பரிசோதனை அடிப்படையில் வளர்க்கப்பட்டு வருகிறது.இதுகுறித்து வேளாண் அறிவியல் மையத்தின் திட்ட ஒருங்கிணைப்பாளர் ராமமூர்த்தி கூறும்போது, 'வேளாண் அறிவியல் மையத்தில் அமைந்துள்ள 'கிரீன் ஹவுசில்' வில்லோ மரக் கன்றுகள் பரிசோதனை அடிப்படையில் வளர்க்கப்பட்டு வருகிறது.
இந்த வகை மரங்கள் வெப்பத்தைத் தாக்குப் பிடிக்காது.எனவே, கிரின் ஹவுசில் குளிர்ச்சியான சூழலில், வில்லோ மரக் கன்றுகள் பராமரிக்கப்படுகிறது' என்றார்.