/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/கடற்கரை மணலில் பொதுமஅதிகாரிகள் அதிரடி: கடற்கரை சாலை "பளீச்'கடற்கரை மணலில் பொதுமஅதிகாரிகள் அதிரடி: கடற்கரை சாலை "பளீச்'
கடற்கரை மணலில் பொதுமஅதிகாரிகள் அதிரடி: கடற்கரை சாலை "பளீச்'
கடற்கரை மணலில் பொதுமஅதிகாரிகள் அதிரடி: கடற்கரை சாலை "பளீச்'
கடற்கரை மணலில் பொதுமஅதிகாரிகள் அதிரடி: கடற்கரை சாலை "பளீச்'
ADDED : ஜூலை 27, 2011 11:47 PM
புதுச்சேரி : புதுச்சேரி கடற்கரையில் மக்கள் நடந்து செல்ல வசதியாக செயற்கை மணற் பரப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
கடற்கரை சாலை சீரமைப்பு பணி காரணமாக இப்பகுதியில் இருந்த கடைகளை தற்காலிகமாக செயற்கை மணற் பரப்பில் நிறுத்த அனுமதியளிக்கப்பட்டது.ஆனால் இங்கு கடைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததால் மக்கள் நடந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. 25ம் தேதி இரவு போலீசார் முன்னிலையில், நகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடைகளை ஒரே வரிசையில் நிறுத்த அறிவுறுத்தினர்.ஒழுங்குபடுத்தப்பட்ட கடைகளை பார்வையிடுவதற்காக நகராட்சி ஆணையர் அழகிரி, உதவிப் பொறியாளர் மலைவாசன் ஆகியோர் நேற்று காலை வந்தனர். அப்போது தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்கள் இரண்டு வரிசைகளாக கடை வைக்க அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால் அதற்கு அதிகாரிகள் ஒப்புக் கொள்ளவில்லை. மாறாக 'லே கபே' ஓட்டலுக்கு பின்புறம் கடற்கரையை ஒட்டியவாறு கடைகள் வைக்க அனுமதிக்கப்பட்டது. பின்னர் அப்பகுதியில் குவிந்திருந்த குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.