Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இன்றி மாணவர் தவிப்பு

இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இன்றி மாணவர் தவிப்பு

இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இன்றி மாணவர் தவிப்பு

இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் பணம் இன்றி மாணவர் தவிப்பு

ADDED : ஜூலை 27, 2011 10:30 PM


Google News

சிவகாசி : சிவகாசி அருகே இன்ஜினியரிங் கல்லூரியில் சீட் கிடைத்தும், பணம் கட்ட முடியாமல் ஏழை மாணவர் தவிக்கிறார்.

சிவகாசி மம்சாபுரம் அருகே பாரைப்பட்டியை சேர்ந்த கஜேந்திரபூபதி மகன் மகேஷ். இவர் விளாம்பட்டி ஏ.வி.எம்.எம்., நாடார் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 படித்து 1106 மதிப்பெண் பெற்றார். கட் ஆப் மார்க்காக 192.5 பெற்று , பள்ளி அளவில் இரண்டாவது இடம் பெற்ற இவரது தந்தை வீட்டு வயரிங் வேலை செய்கிறார். தாய் பட்டாசு ஆலையில் கூலி வேலை செய்கிறார். ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த மகேஷ் ,இன்ஜினியரிங் கவுன்சில் பங்கேற்ற நிலையில், சென்னை ராஜலட்சுமி இன்ஜினியரிங் கல்லூரியில் இ.சி.இ., பிரிவில் படிக்க சீட் கிடைத்துள்ளது.

கல்வி கட்டணம், விடுதி கட்டணம், புத்தகம் போன்றவற்றிற்காக ஒரு லட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டி உள்ளது. ஆனால் இவரது குடும்ப சூழ்நிலையால் பணம் கட்ட முடியாமல் உள்ளார்.



மகனை படிக்க வைக்க தந்தையால் உறவினர், நண்பர்களிடம் கடன் கேட்டும் பணம் கிடைக்கவில்லை. வங்கி கடனுக்கு முயற்சி செய்தபோது வங்கி நிர்வாகமோ, ''முதலாம் ஆண்டுக்கான கட்டண விபரங்களை ,கல்லூரியில் இருந்து வாங்கி வர,'' கோருகின்றன . ஆனால் கல்லூரி நிர்வாகமோ, ''முழு கட்டணத்தையும் செலுத்திய பின்னர்தான், வங்கிக்கான கட்டண விபரம் தரமுடியும் ,''என்கிறது. இதன் காரணமாக இன்ஜினியரிங் சீட் கிடைத்தும் அதில் படிக்க முடியாமல் மாணவர் மகேஷ் முடங்கி உள்ளார். ''உதவும் எண்ணம் கொண்டவர்கள் உதவி செய்தால் நிச்சயம் சாதித்து காட்டுவேன்,'' என்கிறார் மாணவர் மகேஷ். இவரின் நிலை அறிந்து உதவ முன்வருவோர் 88707 81224 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us