ஒடிசா கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது
ஒடிசா கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது
ஒடிசா கடல் பகுதியில் இலங்கை மீனவர்கள் 13 பேர் கைது
ADDED : ஜூலை 26, 2011 06:49 PM
பாரதீப்:ஒடிசா கடல் பகுதியில், அத்துமீறி நுழைந்த, 13 இலங்கை மீனவர்கள், கடலோர காவல் படையினரால் நேற்று கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் வந்த, 3 மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டன.இந்திய கடலோர காவல் படையினர், ஒடிசா மாநில கடலோரப் பகுதிகளில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று படகுகள், சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தன. கடலோர காவல் படையினர், படகுகளை மடக்கி, அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் இலங்கை மீனவர்கள் என தெரிந்தது.பின்னர், அந்த படகுகளில் இருந்த, 13 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டு, பாரதீப் கடலோர போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் வந்த மூன்று படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார், அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.