Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தஞ்சாவூர்/மகிழ்ச்சியான சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடம் :ஆசிரியர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் அறிவுரை

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடம் :ஆசிரியர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் அறிவுரை

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடம் :ஆசிரியர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் அறிவுரை

மகிழ்ச்சியான சூழ்நிலையில் மாணவர்களுக்கு பாடம் :ஆசிரியர்களுக்கு திருவாவடுதுறை ஆதினம் அறிவுரை

ADDED : ஜூலை 26, 2011 12:33 AM


Google News

கும்பகோணம்: ''பள்ளி வகுப்பறையில் மாணவர்களிடம் மகிழ்ச்சியான சூழலை ஏற்படுத்திய பிறகே ஆசிரியர்கள் பாடம் நடத்தவேண்டும்,'' என்று திருவாவடுதுறை ஆதீனம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் தெரிவித்தார்.

கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் மேல்நிலைப்பள்ளிக்கு திருக்கயிலாய பரம்பரைத் திருவாவடுதுறை ஆதீனம் 23வது குருமகா சன்னிதானம் சிவப்பிரகாச தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் வந்தார்.

அங்குள்ள வித்யாகணபதியை வழிபாடு செய்தார். 2,000 மாணவர் பயன்பெறும், ஒன்றரை லட்ச ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்ட, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கருவியை துவக்கி வைத்தார். அடுத்ததாக, பள்ளியில் 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் சீரமைக்கப்பட்ட, மாதவச் சிவஞான சுவாமிகள் நூல் நிலையத்தை வைத்தார். 1.75 லட்ச ரூபாய் மதிப்பிலான 10 கம்ப்யூட்டர்கள் கொண்ட ஆய்வகத்தை திறந்து வைத்தார். திருவாவடுதுறை ஆதீனத்தினால் நடத்தப்படும் காலை உணவு கூடத்தை பார்வையிட்டார். பள்ளி மாணவர்களின் கற்றல் செயல்பாடுகளை ஆய்வு செய்தார். பின், திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் துவக்கப்பள்ளிக்கு சென்றார். அங்கு 150 மாணவர்கள் பயன்படுத்தும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை திறந்து வைத்தார். மாணவ, மாணவிகள் விளையாட ஊஞ்சல், சறுக்கு, சுழல் நாற்காலி முதலான விளையாட்டு உபகரணங்களின் பயன்பாட்டை துவக்கி வைத்தார். தொடர்ந்து, திருவிடைமருதூர் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தேசிகர் நடுநிலைப்பள்ளியில், 800 மாணவர்கள் பயன்படுத்தக்கூடிய ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான குடிநீர் சுத்திகரிப்பு அமைப்பை தொடங்கி வைத்தார். தியாகராஜபுரத்தில் அமைந்துள்ள திருவாவடுதுறை ஆதீனம் தொடக்கப்பள்ளியில் 70 மாணவர்கள் பங்கு பெறும் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார். அனைத்து மாணவர்களுக்கும் அருளாசி வழங்கினார். பின் திருவாவடுதுறை ஆதீனம் நிருபர்களிடம் கூறியதாவது: ஏழை மாணவர்களுக்கு பள்ளியில் வழங்கப்பட்டு வரும் காலை உணவில் சத்துக்குறைவாக உள்ளதா? சுவை குறைவாக உள்ளதா? என்று சோதித்தேன். பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் தங்களது ஒரு நாள் ஊதியத்தை காலை உணவு திட்டத்திற்கு வழங்கும்படி கேட்டுக்கொண்டுள்ளேன். மாணவர்கள் நோய்கள் இல்லாமல் இருக்கவேண்டும். அப்போது தான் அவர்களால் படிப்பில் கவனம் செலுத்தமுடியும்.

மாணவர்களுக்கு ஏற்படும் சிறுசிறு நோய்களை கண்டறிந்து பள்ளி நிர்வாகமே மருத்துவ சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் தனித்திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்கப்படுத்தவேண்டும். ஆசிரியர்கள் வகுப்புக்குள் சென்றவுடன் பாடம் நடத்தக்கூடாது. மாணவர்கள் அனைவரையும் உற்று நோக்கவேண்டும். அனைவரும் புத்துணர்ச்சியுடன், மகிழ்ச்சியுடன் காணப்படுகிறார்களா? என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் சம்பந்தபட்ட மாணவரை அழைத்து அவரது குறைகளை கேட்டறிந்து களையவேண்டும்.

அதன்பின் அனைவரும் ஒரு நிமிடம் தியான நிலையில் இருக்க செய்யவேண்டும். பின் பாடம் நடத்தினால் அனைவரும் நன்கு கவனிப்பார்கள். நாட்டுக்கு நல்ல குடிமகனாக திகழ்வர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us