ADDED : ஜூலை 26, 2011 12:18 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் இரு குழந்தைகளுடன் மனைவியை வாலிபர் கடத்தி சென்றதாக கணவர் புகார் அளித்துள்ளார்.
கிருஷ்ணகிரி பெத்தனப்பள்ளி மேட்டுதெருவை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (33). இவரது மனைவி கீதா (25). இவர்களுக்கு ஏழு ஆண்டுக்கு முன் திருமணமானது. ஒரு ஆண் குழந்தை மற்றும் ஒரு பெண் குழந்தை உள்ளது. கீதா கிருஷ்ணகிரி செட்டியம்பட்டியில் உள்ள மெத்தை தயாரிக்கும் கம்பெனியில் பணிபுரிந்து வந்தார். அப்போது அங்கு பணிபுரிந்த தேன்கனிக்கோட்டை அடுத்த குருபரப்பள்ளியை சேர்ந்த ரவிக்குமார் (25) என்பவருடன் கீதாவுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. கீதாவை கிருஷ்ணகுமார் கண்டித்தார். கடந்த 4ம் தேதி முதல் கீதா மற்றும் இரு குழந்தைகளையும் காணவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் தனது மனைவி கீதா மற்றும் இரு குழந்தைகளை ரவிக்குமார் கடத்தி சென்று விட்டாதாக கிருஷ்ணகுமார் கிருஷ்ணகிரி போலீஸில் புகார் செய்தார். எஸ்.ஐ., விஜயவாணி விசாரிக்கிறார்.