Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் திறப்பு

தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் திறப்பு

தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் திறப்பு

தமிழகத்தின் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரி "வீடியோ கான்பரன்ஸ்' மூலம் முதல்வர் திறப்பு

UPDATED : ஜூலை 25, 2011 11:42 PMADDED : ஜூலை 25, 2011 09:52 PM


Google News
Latest Tamil News

திருச்சி : தமிழகத்தில் முதல் மகளிர் தோட்டக்கலை கல்லூரியை, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம், தமிழக முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

தமிழகத்திலேயே முதல் முறையாக, திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதியில், மகளிருக்கான தோட்டக்கலை கல்லூரி துவக்க விழா நேற்று நடந்தது. சென்னையிலிருந்தபடி தமிழக முதல்வர் ஜெயலலிதா, 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் கல்லூரியை திறந்து வைத்தார்.

துவக்க விழாவில், திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ பேசியதாவது: திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு பல சிறப்புகள் உள்ளன. இப்போது, தமிழகத்திலேயே முதல் முறையாக மகளிருக்கென பிரத்யேகமாக தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

தோட்டக்கலை பயிர்களை பயிர் செய்யும் விவசாயிகளுக்கு, இந்த கல்லூரி உதவியாக இருக்கும். அதேபோல், இரண்டாம் பசுமை புரட்சித் திட்டத்துக்கு இந்த கல்லூரி பெரும் உறுதுணையாக இருக்கும். மாவட்ட நிர்வாகம் மற்றும் மக்கள் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜெயஸ்ரீ கூறினார்.

வீடியோ கான்பரன்ஸ் மூலம் தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியதாவது: ஸ்ரீரங்கம் தொகுதியில் பெண்களுக்கென்றே தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் அமைக்க, கடந்த மாதம் 19ம் தேதி அடிக்கல் நாட்டப்பட்டது. பெண்களுக்கான இந்த கல்லூரியை துவக்கி வைப்பதில், மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கல்லூரியில் பயிலும் மாணவியர் அனைவரும், நல்ல முறையில் கல்வி கற்று, எதிர்காலம் சிறப்புடன் அமைய வேண்டும் என்று நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இதனால், தோட்டக்கலை மேம்பாடு அடையும். இவ்வாறு ஜெயலலிதா பேசினார். விழா, 1.45 மணிக்குத் துவங்கி 1.55 மணிக்கு பத்து நிமிடங்களில் நிறைவடைந்தது.

இன்னும் பல திறப்பு விழாக்கள்: இதன் பின், தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில், 3 கோடியே 48 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட அருப்புக்கோட்டை விவசாயிகள் பயிற்சி மையத்துக்கான நிர்வாக கட்டடம், விவசாயிகள் விடுதி, கோழி மற்றும் ஆடு வளர்ப்பு பற்றிய விளக்க கூடம், வம்பன் - புதுக்கோட்டை விவசாயிகள் பயிற்சி மையத்துக்கு நிர்வாக கட்டடம், தஞ்சை திடக்கழிவுகள் மேலாண்மை ஆராய்ச்சி நிலையத்துக்கு பணியாளர் குடியிருப்பு மற்றும் அலுவலக கட்டடம் ஆகியவற்றையும், 'வீடியோ கான்பரன்ஸ்' மூலம் திறந்து வைத்தார்.

தொடர்ந்து, கோவை வேளாண் பல்கலையில் திடக்கழிவுகள் மேலாண்மை மற்றும் மண்புழு தயாரிப்பு தொழில்நுட்ப விளக்கக் கூடம், விதை ஆய்வுக் கூடத்துக்கு முதல் தளம், சிறு தானிய உற்பத்தி மையத்துக்கு பண்ணை அலுவலகத்துடன் கூடிய கிட்டங்கி, வேப்பந்தட்டை தென்னை ஆராய்ச்சி மையத்துக்கு கிட்டங்கி, வாகன நிறுத்துமிடம், கோவில்பட்டி வேளாண் ஆராய்ச்சி நிலையத்துக்கு மகளிர் விடுதி ஆகிய கட்டடங்களையும், முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

இது தவிர, வேளாண் பல்கலை சார்பில், 2 கோடியே 89 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள, ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கான குடியிருப்பு, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய காய்கறி பயிர்கள் துறைக்கு அலுவலக கட்டடம், ஆய்வுக் கூடங்கள், எரிசக்தி துறைக்கு இயற்கை வளங்கள் மேலாண்மை அலுவலகக் கட்டடம், அச்சுக்கூடம் விரிவாக்கம், ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி மையத்தில் விதை சேமிப்பு கிடங்கு, ஏத்தாபூர் மரவள்ளிக்கிழங்கு ஆராய்ச்சி நிலையத்துக்கு பணியாளர் குடியிருப்பு ஆகிய கட்டடங்களுக்கு, முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

அப்போது, அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து முதல்வர் பேசினார். நிகழ்ச்சியின் போது, வேளாண்மைத் துறை அமைச்சர், தொழில் துறை அமைச்சர், கால்நடைத் துறை அமைச்சர், தலைமைச் செயலர், வேளாண்மைத் துறை செயலர் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us