
திக்விஜய் சிங்கிற்கு கடிவாளம் ரெடி
காங்கிரஸ் பொதுச் செயலர்களில் ஒருவரான திக்விஜய் சிங்கின், நடவடிக்கைகள், எல்லை மீறிப் போவதால், கட்சியின் மேலிட தலைவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ஆரம்பத்தில், இவரின் வார்த்தை சேட்டைகளை ரசித்துக் கொண்டிருந்த, காங்., மேலிடம், இப்போது கவலைப்பட ஆரம்பித்து இருக்கிறது. சமீபத்தில், ஆர்.எஸ்.எஸ்., பற்றி, இவர் தெரிவித்த கருத்துக்கு, ம.பி., மாநில, பா.ஜ., இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்து, திக்விஜய் சிங்கின் காரை மறித்து, போராட்டம் நடத்தினர்.காரில் இருந்து இறங்கிய திக்விஜய், அங்கு நின்றிருந்த பா.ஜ., இளைஞரின் கன்னத்தில், ஓங்கி ஒரு அறை விட்டார். இந்த விவகாரம், தற்போது பூதாகரமாக உருவெடுத்து விட்டது.திக்விஜய் சிங்கின் அடாவடி, அத்துமீறிப் போவதை அடுத்து, அவரது நாக்குக்கு மட்டுமல்லாமல், கைக்கும் கடிவாளம் போடுவது குறித்து, காங்., மேலிடம் யோசித்து வருவதாக, தகவல்கள் கசிகின்றன.