பல கட்சிகளை அங்கீகரிக்க அரசு ஏற்பு : சிரியாவில் வருகிறது அரசியல் மாற்றம்
பல கட்சிகளை அங்கீகரிக்க அரசு ஏற்பு : சிரியாவில் வருகிறது அரசியல் மாற்றம்
பல கட்சிகளை அங்கீகரிக்க அரசு ஏற்பு : சிரியாவில் வருகிறது அரசியல் மாற்றம்
டமாஸ்கஸ் : சிரியாவில், பல கட்சிகளை அங்கீகரிக்கும் மசோதாவை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
சிரிய அரசியல் சாசனப்படி அந்நாடு பார்லிமென்ட் ஜனநாயக அரசியல் கொண்டது என்றாலும், அரபு சோசலிச மறுமலர்ச்சி கட்சி (ஆளும் 'பாத்' கட்சி) தான் 1963ல் இருந்து ஆட்சியில் உள்ளது. சிரிய அரசியல் சாசனத்தின் 8வது பிரிவு, 'பாத்' கட்சி தான் நாட்டையும், சமூகத்தையும் வழி நடத்தும் எனக் கூறுகிறது. சிரியாவில் தற்போது 11க்கும் மேற்பட்ட கட்சிகளுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இக்கட்சிகள், 'பாத்' கட்சியின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டுள்ளன. 30க்கும் மேற்பட்ட கட்சிகள் தலைமறைவாக இயங்கி வருகின்றன.
கடந்த மார்ச் 15ம் தேதி முதல், சிரியாவில் அதிபருக்கு எதிராக நடந்து வரும் போராட்டத்தில், அரசியல் சீர்திருத்தக் கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப் படுகிறது. போராட்டத்தை அடக்கும் வகையில், தற்போது பல கட்சிகளையும் அங்கீகரிக்கும் மசோதாவை அந்நாட்டு அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இம்மசோதா விரைவில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும். இம்மசோதாவின்படி, மதம், பழங்குடியினர் விவகாரம், மண்டல மற்றும் தொழில்ரீதியான அமைப்புகள் ஆகியவற்றின் அடிப்படையிலான கட்சிகள் அனுமதிக்கப்பட மாட்டாது. அதேபோல், சிரிய நாட்டவர் அல்லாத பிறர் கட்சி துவக்கக் கூடாது.