பஸ் ஸ்டாண்ட் பணி 65 சதவீதம் நிறைவு
பஸ் ஸ்டாண்ட் பணி 65 சதவீதம் நிறைவு
பஸ் ஸ்டாண்ட் பணி 65 சதவீதம் நிறைவு
ADDED : ஜூலை 25, 2011 09:15 PM
திருப்பூர் : திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் 65 சதவீத பணிகள் முடிந்துள்ளன.
அடுத்த கட்டமாக, வடக்கு பகுதியில் பணியை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது.திருப்பூர் பழைய பஸ் ஸ்டாண்டில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் சிமென்ட் தளம் அமைக் கும் பணி நடந்து வருகிறது. இதற்காக பஸ் ஸ்டாண்டின் தெற்கு நுழைவாயில் மூடப்பட்டு, ஒரு பகுதியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. வெளியூரில் இருந்து வரும் பஸ்கள், புது பஸ் ஸ்டாண்டுக்கு திருப்பி விடப்பட்டுள் ளன. மினி பஸ்கள், காம ராஜ் ரோட்டில் மாநகராட்சி கடைகள் இடிக்கப் பட்ட இடத்தில் நிறுத்தப் படுகின்றன.சிமென்ட் தளம் அமைக்கும் பணி, கடந்த பிப்., மாதம் துவங்கியது. முதல் இரண்டு மாதங்கள் மந்தகதியில் நடந்தது; கலெக்டர் மதிவாணன் அடிக்கடி ஆய்வு செய்ததை தொடர்ந்து பணிகள் சுறுசுறுப்புஅடைந் தன. தற்போது 300 மீட்டர் சுற்றளவுக்கு சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது.கமிஷனர் ஜெயலட்சுமியிடம் கேட்ட போது,''பழைய பஸ் ஸ்டாண்டில் 65 சதவீத பணிகள் முடிந்துள் ளன. முழுமையாக முடிந்ததும், வடக்கு பகுதியில் பணி துவங்கப்படும். போக்குவரத்தை மாற்றியமைப்பது தொடர்பாக, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், போக்குவரத்து போலீசாருடன் ஆலோசித்து முடிவு செய்யப்பட்டு, பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும்,'' என்றார்.