ADDED : ஜூலை 25, 2011 12:28 PM
வால்பாறை: வால்பாறை அருகே மீண்டும் காட்டு யானைகள் உலா வரத்துவங்கியிருப்பது தொழிலாளர்களை பீதியடைய வைத்துள்ளது.
வால்பாறை சின்ன குந்தரா பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு கூடத்தை சூழ்ந்து கொண்ட காட்டு யானைகள், கூடத்தை சின்னாபின்னமாக்கியது. தொடர்ந்து அவ்விடத்திலேயே நின்று கொண்டிருந்த யானைகளை வனத்துறையினர் மூன்று மணி நேரம் போராடி விரட்டியடித்தனர்.