/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு தீவிரம் : தொழில் துறை இயக்குனர் தகவல்வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு தீவிரம் : தொழில் துறை இயக்குனர் தகவல்
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு தீவிரம் : தொழில் துறை இயக்குனர் தகவல்
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு தீவிரம் : தொழில் துறை இயக்குனர் தகவல்
வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு தீவிரம் : தொழில் துறை இயக்குனர் தகவல்
புதுச்சேரி : 'புதுச்சேரி மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி தருவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது' என, தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனர் வல்லவன் கூறினார்.
தொழில் மற்றும் வணிகத் துறை இயக்குனர் வல்லவன், பயிற்சி முடித்தவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசியதாவது: தொழில் துறையில் புதுச்சேரி பல்வேறு நிலைகளில் வளர்ச்சி பெற்றிருந்தது. இதனால் நிறைய தொழிற்சாலைகள் புதுச்சேரிக்கு வந்து கொண்டிருந்தன. 1996க்குப் பின் எதற்காக வரவேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் பெரிய தொழிற்சாலைகள் இங்கிருந்து வெளியேறின. ஆனாலும் ஆண்டுக்கு 400 புதிய தொழிற்சாலைகள் வந்து கொண்டுள்ளன. 2010-11ம் ஆண்டில் தொழிற்சாலைகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ. 82 கோடியாகும். இவற்றில் ஏ.எப்.டி., சுதேசி மில்கள் மற்றும் கதர் வாரிய தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க 69 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. தொழில்துறை பட்ஜெட்டின் மொத்த நிதியில் 90 சதவிகிதம் தொழிலாளர்களுக்கு சம்பளமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள பாரம்பரியமிக்க மில் களை செயல்படுத்த அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. 'இன்சென்டிவ்' இல்லையென் றால் ஏன் தொழில் துவங்க வேண்டும் என கேட்கின்றனர். புதுச்சேரியில் விளைநிலங்கள் எல்லாம் தற்போது பிளாட்டுகளாக மாறி வருகின்றன. கிராமப்புறங்களில் தொழிற்சாலைகள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக ஒருமாத காலத்திற்குள் புதிய தொழில் கொள்கை உருவாக்கப்பட உள்ளது. புதுச்சேரியில் தனியார் கம்பெனிகளில்தான் அதிக மக்கள் வேலை செய்கின்றனர். மக்களுக்கு நல்ல முறையில் வேலைவாய்ப்பை உருவாக்கிக் கொடுக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. இவ்வாறு வல்லவன் பேசினார்.