ADDED : ஜூலை 24, 2011 05:29 AM
திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் ஆத்தங்கரை பள்ளிவாசலை சேர்ந்தவர் செய்யது யூசுப்(45).
டீக்கடை ஒன்றில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்பட மூன்று குழந்தைகள் உள்ளனர்.
கடந்த ஜூன் 1 ல், நான்காவதாக பெண் குழந்தை பிறந்தது. குடிப்பழக்கம் உள்ள செய்யதுயூசுப் தமது நான்காவது குழந்தையை குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்த சாத்தான்குளத்தை சேர்ந்த காளிமுத்து(55) க்கு விற்றுவிட்டார். காளிமுத்து தற்போது மும்பையில் வசிக்கிறார். இந்த தகவலை குடிபோதையில் செய்யது யூசுப் உளறியுள்ளார். கூடங்குளம் போலீசார் வழக்குபதிவு செய்து செய்யது யூசுப்பை கைது செய்தனர். பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டு சரணாலயம் தொண்டு நிறுவனத்தில் ஒப்படைக்கப்பட்டது.