/உள்ளூர் செய்திகள்/சென்னை/"சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்'"சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்'
"சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்'
"சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்'
"சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்'
ADDED : ஜூலை 24, 2011 03:33 AM
சென்னை:''சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல; கல்வியே முக்கியம்,'' என, தகவல்
ஆணையர் சாரதா நம்பி ஆரூரன் பேசினார்.சுடர் வம்சம் அமைப்பு சார்பில், பள்ளி
மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. ஆறாம் ஆண்டாக கல்வி
உதவித் தொகை யை இந்த அமைப்பு வழங்கி வருகிறது. நடப்புக் கல்வி ஆண்டில்,
அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 125 மாணவ, மாணவியருக்கு தலா 1,000
ரூபாய் கல்வி உதவித் தொகையும், ஆங்கிலம் - தமிழ் அகராதியும்
வழங்கப்பட்டது.விழாவில், தமிழக தகவல் ஆணையர் சாரதா நம்பி ஆரூரன்
பேசியதாவது:எதிர்காலத்தில் எண்ணற்ற செயல்களைச் செய்ய வேண்டும், பெரும்
பொறுப்புகளுக்கு வர வேண்டும் என இலக்குகளை வைத்துக் கொண்டு இளைஞர்கள்
செயல்பட வேண்டும். கல்வி, உழைப்பு, தன்னம்பிக்கையுமே உயர்வுக்கு
வழிவகுக்கும். ஜோதிடம் போன்ற மூடநம்பிக்கைகளை பின்பற்றக்கூடாது.
மாணவர்களுக்கு, முன்மாதிரியாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும்.நேர்மறையான
அணுகுமுறையை இளைஞர்கள் கொண்டிருக்க வேண்டும். பொறுப்புணர்ச்சி
மிக்கவர்களாகத் திகழ வேண்டும். பெண்கள் ஊக்கத்தைக் கைவிடக்கூடாது. 'உன்னால்
சாதிக்க முடியுமா' என பிறர் கூறும் நம்பிக்கை இழக்கச் செய்யும்
வார்த்தைகளை அலட்சியப்படுத்திவிட்டு, முன்னேற்றப் பாதையில், பெண்கள் நடைபோட
வேண்டும்.அனைத்துத் துறைகளிலும் உள்ள நல்ல விஷயங்களை அன்னப்பறவை போல
உள்வாங்கிக் கொள்ள வேண்டும். சினிமாவில் உள்ள நல்ல அம்சங்களை அறிந்து கொள்ள
வேண்டும். ராஜராஜசோழன் திரைப்படம் தான், தமிழ் இலக்கியத்தை பாமர
மக்களுக்கும் கொண்டு சென்றது.காற்று, நீர், மண் ஆகியவற்றை மாசுபடுத்தக்
கூடாது என விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.
அவற்றைவிட, முக்கியமாக,
நாட்டுக்கு மிக அவசியான குழந்தைகளின் உள்ளங்களை, மாசுபடுத்தாமல் அடுத்த
தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டியது நமது கடமை.சாதாரண குடும்பத்தைச்
சேர்ந்தவர்களும் சாதிக்க முடியும். சாதனைகளுக்கு பணம் முக்கியமல்ல. கல்வியே
முக்கியம். இதை மனதில் கொண்டு, மாணவர்கள் கற்றுத் தேற வேண்டும்.இவ்வாறு
சாரதா நம்பி ஆரூரன் பேசினார்.ஆனந்த் திரையரங்கு உரிமையாளர் கருணாகரன்
பேசும்போது, ''ஒழுக்கத்தை உயிரினும் மேலாக மாணவர்கள் கருத வேண்டும்.
விடாமுயற்சி வாழ்க்கையில் வெற்றியைத் தேடித் தரும். குறும்புகளோடு கூடியது
தான் இளம் பருவம். அப்பருவத்தில் கிடைக்கும் பெரியோரின் சந்திப்பு, நல்ல
செய்திகளை மனதில் விதைக்கின்றன. வாழ்க்கைக்கு வழிகாட்டியாக அவை அமை
கின்றன,'' என்றார்.சுடர் வம்சம் தலைவர் ரகுராஜ் தலைமை வகி த்தார். ஆலோசகர்
சந்திரன் சாமி முன்னிலை வகித் தார். பொறுப் பாளர்கள் கமலக் கண் ணன்,
சங்கரன் ஆகியோர் விழ õவுக் கான ஏற்பாடு களைச் செய்திருந்தனர்.