அறக்கட்டளை நிலத்தை நிர்வகிப்பதில் முறைகேடு: பாதிரியார், ஜேப்பியார் மீது வழக்கு பதிவு
அறக்கட்டளை நிலத்தை நிர்வகிப்பதில் முறைகேடு: பாதிரியார், ஜேப்பியார் மீது வழக்கு பதிவு
அறக்கட்டளை நிலத்தை நிர்வகிப்பதில் முறைகேடு: பாதிரியார், ஜேப்பியார் மீது வழக்கு பதிவு
சென்னை : அறக்கட்டளை நிலத்தை நிர்வாகம் செய்வதில் ஏற்பட்ட முறைகேடு தொடர்பாக, மயிலை மறை மாவட்ட பேராயர், கல்வி நிறுவனங்களின் அதிபர் ஜேப்பியார் உள்ளிட்ட, 14 பேர் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
வெளிநாட்டைச் சேர்ந்தவர் ஆண்டி டிமாண்டி.
டிமாண்டி அறக்கட்டளைக்கு சொந்தமான, 160 கிரவுண்ட் நிலம், ராஜா அண்ணாமலைபுரம் போட் கிளப் சாலையில் உள்ளது. இந்த நிலத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன், கல்வி அதிபர் ஜேப்பியார் குத்தகைக்கு எடுத்தார். இதில் முறைகேடு நடந்திருப்பதாக கிறிஸ்தவ மக்கள் போர்க்கொடி எழுப்பினர்.
மயிலை மறைமாவட்ட பேராயர் அருள்தாஸ் ஜோசப் மற்றும் நிர்வாகிகள் இதற்கு உடந்தையாக இருந்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இப்பிரச்னை தொடர்பாக, ஓய்வுப் பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம், கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
'நிலத்தை, அறக்கட்டளையிடம் ஒப்படைக்க வேண்டும்' என, கோர்ட் கடந்தாண்டு உத்தரவிட்டது. இது தொடர்பாக, கிறிஸ்தவ மக்கள் தரப்பில், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்யப்பட்டது.
விசாரணை நடத்திய போலீசார், மயிலை மறைமாவட்ட பேராயர் அருள்தாஸ் ஜோசப் மற்றும் பல பங்கு தந்தைகள், நிர்வாகிகள், கல்வி அதிபர் ஜேப்பியார் உள்ளிட்ட, 14 பேர் மீது, நான்கு பிரிவுகளில், கடந்த 19ம் தேதி வழக்கு பதிவு செய்துள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது.