/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் "அட்வைஸ்'ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் "அட்வைஸ்'
ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் "அட்வைஸ்'
ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் "அட்வைஸ்'
ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதி கிராம சபை கூட்டத்தில் கலெக்டர் "அட்வைஸ்'
ADDED : ஜூலை 24, 2011 01:42 AM
திருநெல்வேலி : ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்று அரியகுளத்தில் நடந்த கிராம சபை கூட்டத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.அரியகுளத்தில் கிராம சபை கூட்டம் நடந்தது.
பஞ்., தலைவர் பேச்சிமுத்து ராஜ் தலைமை வகித்தார். இதில் கலெக்டர் நடராஜன் பேசியதாவது:பிளாஸ்டிக் பொருட்களை ஒழிப்பதில் இந்த கிராமம் முன்னோடி கிராமமாக திகழ்கிறது. கடைகளில் பிளாஸ்டிக் பைகளை உபயோகப்படுத்துவது தட செய்யப்பட்டுள்ளது.இப்பகுதி மக்களுக்கு குடிநீர் திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு குடிநீர் பயன்பாட்டில் தன்னிறைவு பெற்றுள்ளனர். இப்பகுதிகளை சேர்ந்த மக்கள் அதிக அளவில் ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். கால்நடை ஆராய்ச்சி பல்கலைக் கழகத்தில் உயர் ரக ஆடுகளை வாங்கி வளர்த்து பயன் பெற வேண்டும். ஆடு, மாடுகளை வளர்க்க உரிய கடன் வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அளிக்கப்படும். ஒவ்வொரு வீட்டிலும் தனித்தனி கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட வேண்டும். புதிய, புதிய தொழில்களை தொடங்க இப்பகுதி மக்கள் முன்வர வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.இதில் துணைத் தலைவர் வேலாயுதம், குடிநீர் வடிகால் வாரிய உதவி இன்ஜினியர் இளங்கோ, பி.டி.ஓக்கள் சரஸ்வதி, தேவிகா உட்பட பலர் கலந்து கொண்டனர்.