மதுரை மாநகராட்சியின்புதிய கமிஷனர் நடராஜன்
மதுரை மாநகராட்சியின்புதிய கமிஷனர் நடராஜன்
மதுரை மாநகராட்சியின்புதிய கமிஷனர் நடராஜன்
UPDATED : ஜூலை 24, 2011 03:41 AM
ADDED : ஜூலை 24, 2011 01:39 AM
மதுரை:மதுரை மாநகராட்சி கமிஷனர் செபாஸ்டினுக்குப் பதில், புதிய கமிஷனராக முதல்வர் ஜெயலலிதாவின் முன்னாள் பி.ஏ., எஸ்.நடராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.நாமக்கல் மாவட்டம் குருசாமி பாளையத்தைச் சேர்ந்த இவர், 1951ல் பிறந்தவர்.
எம்.எஸ்சி.,வேதியியல் படித்துள்ளார். திருவாரூரில் ஆர்.டி.ஓ., நீலகிரி மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர், கோவை மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலராக பணியாற்றியுள்ளார்.1991ல் முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்பெஷல் பி.ஏ.,வாகவும், 1992ல் முதல்வரின் துணைச் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். 1998 ல் ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக உயர்ந்தார். பின் ஸ்ரீபெரும்புதூரில் டி.ஆர்.ஓ., நகராட்சி நிர்வாகத்தில் துணை செயலாளர், நாகர்கோவிலில் ஒழுங்குமுறை ஆணையராகவும் பணியாற்றினார். அதன்பின் கடந்த 2 ஆண்டுகளாக மதுரையில் ஒழுங்கு முறை ஆணையராக பணியாற்றி வருகிறார்.