/உள்ளூர் செய்திகள்/கடலூர்/தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
தனியார் இடத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஜூலை 23, 2011 11:39 PM
திட்டக்குடி : பெண்ணாடத்தில் தனியார் இடத்தில் ஆக்கிரமிப்புகளை போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன.
திட்டக்குடி அடுத்த பெண்ணாடத்தைச் சேர்ந்தவர்கள் சிவானந்தம், சிவப்பிரகாசம். இருவருக்கும் அதே பகுதியில் சொந்தமாக ஒரு ஏக்கர் நிலம் இருந்தது. இந்த இடத்தை தனியார் சிலர் ஆக்கிரமித்து, கொட்டகை போட்டிருந்தனர். இது குறித்து நில உரிமையாளர், உரிய ஆவணங்களுடன் சென்று கலெக்டரிடம் முறையிட்டார். கலெக்டரின் பரிந்துரையின் பேரில் திட்டக்குடி தாசில்தார் சையத் ஜாபர், மண்டல துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தி, வருவாய் ஆய்வாளர் விருத்தகிரி, கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. டி.எஸ்.பி., அறிவழகன் தலைமையில், பெண்ணாடம் இன்ஸ்பெக்டர் வீரப்பன் உட்பட 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.