ஜிஎஸ்டி குறைப்பு பெருமை எங்களையே சேரும்: சொல்கிறார் மம்தா
ஜிஎஸ்டி குறைப்பு பெருமை எங்களையே சேரும்: சொல்கிறார் மம்தா
ஜிஎஸ்டி குறைப்பு பெருமை எங்களையே சேரும்: சொல்கிறார் மம்தா
ADDED : செப் 21, 2025 08:54 PM

கோல்கட்டா: '' ஜிஎஸ்டி சீரமைப்பை வலியுறுத்தியது நாங்கள். இதற்கான பெருமையை பிரதமர் எடுத்துக் கொள்வது ஏன்?'' என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.
ஜிஎஸ்டி சீர்திருத்தம் நாளை முதல் அமலுக்கு வர உள்ள நிலையில், வருமான வரிச்சலுகை மற்றும் ஜிஎஸ்டி குறைப்பால் மக்களுக்கு இரட்டை மகிழ்ச்சி கிடைத்துள்ளது என பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் கூறியிருந்தார்.
இது தொடர்பாக மம்தா பானர்ஜி கூறியதாவது: மாநில அரசுக்கு ரூ.20 ஆயிரம் கோடி இழப்பு ஏற்படுகிறது. இருப்பினும், ஜிஎஸ்டி குறைப்பால் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். ஆனால், அதற்கான பெருமையை நீங்கள் எடுத்துக் கொள்வது ஏன்?
ஜிஎஸ்டியை குறைக்க வேண்டும் என சொன்னது நாங்கள் இதற்கான ஆலோசனையை மத்திய நிதிமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாங்கள் எடுத்து சொன்னோம். இவ்வாறு மம்தா கூறியுள்ளார்.