பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பிய இளைஞர் சுட்டுக்கொலை: உ.பி.யில் 9 பேர் மீது வழக்கு, 4 போலீசார் சஸ்பெண்ட்
பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பிய இளைஞர் சுட்டுக்கொலை: உ.பி.யில் 9 பேர் மீது வழக்கு, 4 போலீசார் சஸ்பெண்ட்
பிறந்தநாள் விழாவுக்கு சென்று திரும்பிய இளைஞர் சுட்டுக்கொலை: உ.பி.யில் 9 பேர் மீது வழக்கு, 4 போலீசார் சஸ்பெண்ட்
ADDED : செப் 21, 2025 08:25 PM

பல்லியா: உத்தரபிரதேசத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலில் 26 வயது நபர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக 9 பே ர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது. 4 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தின் ஹால்டிபூர் பகுதியில் இந்த சம்பவம் நடைபெற்றது.
இது குறித்து போலீஸ் அதிகாரி ஓம்வீர் சிங் கூறியதாவது:
நிருபூர் கிராமத்தைச் சேர்ந்த சுனில் யாதவ் 26 நேற்று மாலை பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பி கொண்டிருந்தபோது, ராய்புராதலாவில் இரு போட்டி குழுக்களிடையே பழைய பகை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டது.
வாக்குவாதம் சண்டையாக மாறியநிலையில் இரு குழுவினருக்கும் தொடர்பில்லாத சுனில் யாதவ், துப்பாக்கியால் சுடப்பட்டு, மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தனர். அதை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்டவரின் தந்தை சிவசங்கர் யாதவ் அளித்த புகாரின் பேரில், பங்கஜ் ராய், லட்சுமி நாராயண் சவுபே, நீரஜ் சவுபே, ஷ்ரவன் துபே மற்றும் அடையாளம் தெரியாத நான்கு பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக, அலட்சியம், கடமை தவறியதற்காக, எஸ்ஐக்கள் ரவி வர்மா, உதய் பிரதாப் சிங், தலைமை காவலர் அரவிந்த் யாதவ், காவலர் அஜய் யாதவ் ஆகியோர் உடனடியாக சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
விசாரணையில்,செயின்ச்சாப்ரா கிராமத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயண் சவுபே மற்றும் ராய்புராவைச் சேர்ந்த பங்கஜ் ராயின் குடும்பங்களுக்கு இடையே நீண்டகாலமாக தகராறு இருந்து வந்தது. பிப்ரவரியில், சரஸ்வதி பூஜைக்கு நிதி வசூலிப்பது தொடர்பாக தாக்குதல் நடத்தியதாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து இரு குழுக்களுக்கும் எதிராக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
அந்த வழக்குகளில் போலீசார் நடவடிக்கை எடுக்கத் தவறியதால் இந்தசம்பவம் நடந்துள்ளது, குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கண்டுபிடிக்க முயற்சிகள் நடந்து வருகிறது.
இவ்வாறு ஓம்வீர் சிங் கூறினார்.