Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/பெரம்பலூர் கோர்ட் தீர்ப்பு கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள்

பெரம்பலூர் கோர்ட் தீர்ப்பு கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள்

பெரம்பலூர் கோர்ட் தீர்ப்பு கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள்

பெரம்பலூர் கோர்ட் தீர்ப்பு கொலை வழக்கில் நால்வருக்கு ஆயுள்

ADDED : ஜூலை 23, 2011 12:01 AM


Google News

பெரம்பலூர்: அரியலூர் மாவட்டம், செந்துறை தாலுகா, பெரியாக்குறிச்சி கிராமத்தில் உள்ள தலித் சமூகத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் கவர்னர்(32).

கடந்த 11 ஆண்டுக்கு முன் லலிதா என்ற பெண்ணை திருமணம் செய்த கவனர்ருக்கு குழந்தைகள் இல்லை. அதே ஊரை சேர்ந்த வன்னியர் சமூகத்தை சேர்ந்த முத்துராஜ் மனைவி தமிழரசிக்கும், கவர்னருக்கும் கள்ள தொடர்பு ஏற்பட்டது.தொடர்ந்து தமிழரசியை தனது வீட்டுக்கே அழைத்து சென்று குடும்பம் நடத்திய கவர்னருக்கு, தமிழரசி மூலம் மூன்று குழந்தை பிறந்தது. ஆனாலும், தனது சகோதரியை வேறு சமூகத்தை சேர்ந்த ஒருவர் அழைத்துச் சென்று குடும்பம் நடத்துவது, தமிழரசியின் சகோதரர்களுக்கு மனஉளச்சலை ஏற்படுத்தியது.

கடந்த 2007 செப்., 4ம் தேதி இரவு, ஆர்.எஸ். மாத்தூருக்கு சினிமா பார்க்க சென்ற கவர்னரை பின்தொடர்ந்து சென்ற தமிரசி சகோதரர்கள் சிற்றரசு(27), கொடியரசு(40), இளவரசு(35), அன்பரசு(32) நால்வரும், பெரியாக்குறிச்சி காட்டு பகுதியில் கவர்னரை தாக்கி கொலை செய்ததுடன், சடலத்தை, அருகில் உள்ள ரயில் தண்டவாளத்தில் வீசினர். அவ்வழியே வந்த இரவு நேர ரயிலில் சிக்கி, கவர்னரின் சடலம் துண்டு, துண்டாகியது.ரயில் தண்டவாளத்தில் கிடந்த சடலத்தை கைப்பற்றிய விருத்தாஜலம் ரயில்வே போலீஸார், கவர்னரின் சாவு தற்கொலை என வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். செந்துறை போலீஸார் நடத்திய தொடர் விசாரணையில், சிற்றரசு சகோதரர்கள் கவர்னரை அடித்துக் கொலை செய்தது, சடலத்தை ரயில் தண்டவாளத்தில் வீசியது பற்றிய விபரம் தெரியவந்தது. இதையடுத்து சம்பவம் நடந்த சில வாரங்களில் கொலை, கொலையை மறைத்தல் உள்ளிட்ட நான்கு குற்ற பிரிவுகளின் கீழ், சிற்றரசு உள்ளிட்ட நால்வர் மீது வழக்கு பதிவு செய்த செந்துறை போலீஸார் அவர்களை கைது செய்தனர். வழக்கு விசாரணை பெரம்பலூர் மாவட்ட செசன்ஸ் கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த பெரம்பலூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி ராஜூ, குற்றவாளிகள் சிற்றரசு, கொடியரசு, இளவரசு அன்பரசு உள்ளிட்ட நால்வருக்கும் ஆயுள் தண்டனை, தலா 8,000 ரூபாய் அபராதமும், கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனையும் விதித்து தீர்ப்பு கூறினார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us