Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு தவிர்க்க கம்பி வேலி அமைப்பு

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு தவிர்க்க கம்பி வேலி அமைப்பு

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு தவிர்க்க கம்பி வேலி அமைப்பு

நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு தவிர்க்க கம்பி வேலி அமைப்பு

ADDED : ஜூலை 21, 2011 02:17 AM


Google News

நாமக்கல் : ஆக்கிரமிப்புகளை தவிர்க்கும் வகையில், நாமக்கல்-ப.வேலூர் சாலையில், நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடத்தில், கம்பி வேலி அமைக்கப்பட்டு வருகிறது.

சேலம்-கரூர் வரையிலான நான்கு வழிச்சாலைத் திட்டப் பணி முழுமையாக நிறைவு பெற்று, வாகனப் போக்குவரத்து பயன்பாட்டில் உள்ளது. பயணிகளின் வசதிக்காக, ஆங்காங்க சர்வீஸ் ரோடு என தனியாக பிரித்து அங்கு இருக்கையுடன் கூடிய நிழற்கூடம், குடிநீர் தொட்டி உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளது. வாகன போக்குவரத்து எதிர்காலத்தில் அதிகாரித்தால் சாலை அகலப்படுத்துவதற்காக, நிலம் கையப்படுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற இடங்களை யாரும் ஆக்கிரமிக்காமல் இருப்பதற்காக, நாமக்கல் முதல் ப.வேலூர் வரை நான்கு வழிச்சாலையின் ஓரத்தில், நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடத்தில், கம்பி வேலி அமைத்து வருகின்றனர். 'இதுபோல், அனைத்து பகுதியிலும், நெடுஞ்சாலைத்துறையினருக்கு சொந்தமான இடத்தில், கம்பி வேலி அமைக்கப்படும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us