Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

மாணவர்களுக்கு டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு

ADDED : ஜூலை 21, 2011 12:53 AM


Google News

உடுமலை : எரிசனம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், டெங்கு காய்ச்சல் மற்றும் சிக்-குன்-குன்யா விழிப்புணர்வு மாத விழா, தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்தது.

வட்டார மருத்துவ அலுவலர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.விழாவில், 'அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளுக்கு கொசுக்களினால் பரவும் டெங்கு, சிக்-குன்-குன்யா, மலேரியா மற்றும் யானைக்கால் உள்ளிட்ட நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்; நோய்களை பரப்பும் கொசுக்களின் உற்பத்தியினை கட்டுப்படுத்தும் விதம் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்து, கொசு ஒழிப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. திறந்த வெளியில் நீர் தேங்காமல் பாதுகாக்கவும், நீர் சேமிக்கும் கலன்களில் கொசு நுழையாதபடி பொதுமக்கள் மூடிவைக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.விழாவிற்கான ஏற்பாடுகளை வட்டார சுகாதார மேற்பார்வையாளர் மகாராசன், சுகாதார ஆய்வாளர்கள் குப்புசாமி, சிவானந்தம் மற்றும் கிராம சுகாதார செவிலியர்கள் செய்திருந்தனர்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us