அரசு பள்ளி அருகில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியில்லை
அரசு பள்ளி அருகில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியில்லை
அரசு பள்ளி அருகில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதியில்லை
ADDED : ஜூலை 20, 2011 05:20 PM
ஸ்ரீநகர்: காஷ்மீர் மாநிலத்தில் அரசு பள்ளிகள் அருகில் தனியார் பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என அம்மாநில கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார்.
இது தொடர்பாக காஷ்மீர் மாநில கல்வித்துறை அமைச்சர் பெர்ஜடா முகமது சயீத் கூறுகையில், அரசு கல்வி நிறுவனங்களுக்கு அருகில் தனியார் பள்ளிகள் வர அனுமதிக்கப்படாது. இது தொடர்பான மாநில அரசின் உத்தரவை அமல்படுத்த வேண்டும். மாநிலத்தில் கல்வியறிவு பெற்றவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க மாநில அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்களான சர்வ சிக்ச அபியான், ராஜ்டிரயா மத்யமிக் சிக்ஷா அபியான் ஆகிய திட்டங்கள் காஷ்மீர் மாநிலத்தில் அமல்படுத்தப்படுகிறது என கூறினார்.