/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அ.தி.மு.க., பழிவாங்கும் செயலில் ஈடுபடாது ஆனந்தன் எம்.பி., பேச்சுஅ.தி.மு.க., பழிவாங்கும் செயலில் ஈடுபடாது ஆனந்தன் எம்.பி., பேச்சு
அ.தி.மு.க., பழிவாங்கும் செயலில் ஈடுபடாது ஆனந்தன் எம்.பி., பேச்சு
அ.தி.மு.க., பழிவாங்கும் செயலில் ஈடுபடாது ஆனந்தன் எம்.பி., பேச்சு
அ.தி.மு.க., பழிவாங்கும் செயலில் ஈடுபடாது ஆனந்தன் எம்.பி., பேச்சு
ADDED : ஜூலை 19, 2011 12:20 AM
ரிஷிவந்தியம் : அ.தி.மு.க., அரசு எப்போதும் பழிவாங்கும் செயலில் ஈடுபடாது என்று எம்.பி., ஆனந்தன் பேசினார்.
ரிஷிவந்தியம் அடுத்த பகண்டை கூட்ரோடில் அண்ணா தொழிற்சங்கம் சார்பில் மே தின விழா பொதுக் கூட்டம் நடந்தது. அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர் கதிர் தண்டபாணி தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் ராமகிருஷ்ணன், மாநில மகளிரணி செயலாளர் அமுதா, ஜெ., பேரவை செயலாளர் அருணகிரி முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் வரவேற்றார். மாவட்ட அண்ணா தொழிற் சங்க இணை செயலாளர் பொன்னுசாமி வாழ்த்தி பேசினார். விழுப்புரம் எம்.பி., ஆனந்தன் கலந்து கொண்டு பேசியதாவது: முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., காலத்தில் இருந்தே மே தின விழா சிறப்பாக கொண்டாப்பட்டு வருகிறது. கடந்தாண்டு மே தின விழா கூட்டத்தில் விரைவில் ஜெ., ஆட்சி மலரும் என்று கூறியிருந்தேன். அது இன்று மக்களின் ஆதரவோடு நடந்துள்ளது. உழைக்கும் வர்க்கத்தினருக்கும், தொழிலாளர்கள் நலனுக்காக முதல்வர் ஜெ., சிறப்பு கவனம் எடுத்து பல நலத் திட்டங்கள் செயல்படுத்தி வருகிறார். ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்ததால் தி.மு.க., தனது ஆட்சியை தமிழகத்தில் இழந்துள்ளது. மக்களிடமும் கருணாநிதி செல்வாக்கை இழந்துள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து முதல்வர் ஜெ., தான் முதலில் குரல் கொடுத்தார். ராஜா ராஜினாமா செய்யமாட்டார் என்று அப்போது கருணாநிதி பேசினார். இப்போது ராஜாவும், கனிமொழியும் ஜெயிலில் உள்ளனர். இந்த ஊழல் இந்தியா முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க., பொய் வழக்குப் போடுகிறது என்று கருணாநிதி கூறுகிறார். தி.மு.க., ஆட்சியில் தான் முன்னாள் அமைச்சர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டது. அ.தி. மு.க., அரசு எப்போதும் பழிவாங்கும் செயலில் ஈடுபடாது. இவ்வாறு ஆனந்தன் எம்.பி., பேசினார்.