ADDED : ஜூலை 19, 2011 12:17 AM
அரூர்: அரூர் மற்றும் கம்பைநல்லூர் பகுதியில் மதுவை பதுக்கி வைத்து விற்பனை செய்த மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர்.
அரூர் அடுத்த ஏ.பள்ளிப்பட்டியை சேர்ந்த ராம்ராஜ் (25). இவர் டாஸ்மாக் மதுவை வாங்கி பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்துள்ளார். இவரை ஏ.பள்ளிப்பட்டி எஸ்.ஐ., கார்த்திக்கேயன் கைது செய்தார். * கம்பைநல்லூரை சேர்ந்தவர் மயில்சாமி (35), குப்பன் (48) ஆகியோர் டாஸ்மாக் மதுவவை வாங்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றனர். இவர்கள் இருவரையும் கம்பைநல்லூர் எஸ்.ஐ., முருகன் கைது செய்தார்.