/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேருக்கு வலைவேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேருக்கு வலை
வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேருக்கு வலை
வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேருக்கு வலை
வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேருக்கு வலை
ADDED : ஜூலை 17, 2011 01:37 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அருகே தனியார் கம்பெனிக்கு வேலி அமைக்கும் பணியை தடுத்து நிறுத்திய 20 பேரை போலீசார் தேடிவருகின்றனர்.பரங்கிப்பேட்டை அடுத்த பஞ்சங்குப்பம் கிராமத்தில் தனியார் அனல்மின் நிலையம் அமைக்கப்படுகிறது.
அதற்காக கம்பெனி வாங்கிய விவசாய நிலங்களில் வேலி அமைக்கும் பணி நடந்து வருகிறது.நேற்று முன்தினம் கரிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த தனபால், பரமானந்தம் உட்பட 20 பேர் அங்கு சென்று எங்களிடம் வாங்கிய நிலத்திற்கு இழப்பீடு தராமல் வேலி அமைக்கக்கூடாது என தடுத்து நிறுத்தி மிரட்டிச் சென்றனர்.கம்பெனி பாதுகாப்பு அதிகாரி காமராஜ் கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் வழக்குப்பதிந்து தனபால், தேவராஜ், சம்பத், பரமானந்தம், மணிக்கண்டன் உட்பட 20 பேரை தேடிவருகின்றனர்.