/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனைஅனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை
அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை
அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை
அனுமதியின்றி இயங்கிய பார்களில் டாஸ்மாக் அதிகாரிகள் சோதனை
ADDED : ஜூலை 17, 2011 01:32 AM
செஞ்சி : செஞ்சியில் அனுமதியின்றி டாஸ்மாக் கடை அருகே நடத்திய பார்களில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
செஞ்சியில் டாஸ்மாக் கடைகளுக்கு அருகில் அனுமதியின்றி இயங்கிய பார்களில் திருச்சி முதுநிலை மண்டல மேலாளர் அண்ணாதுரை, விழுப்புரம் கலால் உதவி ஆணையர் தனபால், டி.எஸ்.ஓ., பரமேஸ்வரி, இன்ஸ்பெக்டர் சிங்கார வேலு அதிரடி சோதனை நடத்தினர்.தாலுகா ஆபிஸ் எதிரிலிருந்த இரண்டு கடைகள், பஸ் நிலையம் எதிரில் உள்ள ஒரு கடையிலும் சோதனை நடத்தினர். தாலுகா ஆபிஸ் முன்பு இருந்த கடையில் 10 குவாட்டர் பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தனர். இங்கிருந்த நெகனூர் கிராமம் முருகைய்யன், மற்றொரு கடையில் பொன்பத்தி ஜெய பால், அசோக்கை கைது செய்தனர்.இந்த கடைகளில் இருந்து காலி பாட்டில் மூட்டைகளை பறிமுதல் செய்தனர். பஸ் நிலையம் எதிரில் இருந்த கடையில் கேனில் வைத்திருந்த 10 லிட்டர் மண்öண்ணெயை பறிமுதல் செய்தனர்.