/உள்ளூர் செய்திகள்/மதுரை/பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள் தபாலில் பட்டுவாடா செய்யும் போலீஸ்பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள் தபாலில் பட்டுவாடா செய்யும் போலீஸ்
பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள் தபாலில் பட்டுவாடா செய்யும் போலீஸ்
பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள் தபாலில் பட்டுவாடா செய்யும் போலீஸ்
பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்கள் தபாலில் பட்டுவாடா செய்யும் போலீஸ்
ADDED : ஜூலை 15, 2011 01:34 AM
மதுரை : பாஸ்போர்ட் சரிபார்ப்பு விண்ணப்பங்களை ஆன்-லைனில் அனுப்புமாறு போலீசாருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் உத்தரவிட்ட நிலையில், அதற்கான வசதி இன்னும் ஏற்படுத்தாததால், வழக்கம் போல் தபாலிலேயே பட்டுவாடா செய்கின்றனர்.
மதுரை கோச்சடையில் ஜூன் 30 முதல், பொதுமக்களுக்கு விரைவாகவும், எளிதாகவும் பாஸ்போர்ட் கிடைக்க தனியார் பங்களிப்புடன் பாஸ்போர்ட் சேவை மையம் செயல்படுகிறது. முன்பு, மண்டல பாஸ்போர்ட் அலுவலகத்தில் இருந்து சம்பந்தப்பட்ட மாவட்ட எஸ்.பி., அலுவலகத்திற்கு சரிபார்ப்பு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன. ஆய்வுக்கு பின், பாஸ்போர்ட் பிரிவுக்கு அனுப்பப்படும் அந்த விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்திற்கு தபாலில் அனுப்புவர். இந்த நடைமுறையால், பாஸ்போர்ட் கிடைக்க குறைந்தது இரு வாரங்களாகும்.
இதை தவிர்க்க, சரிபார்ப்பு விண்ணப்பங்களை, தபாலில் அனுப்பாமல், ஆன்-லைனில் கேட்கப்படும் விபரங்களை உடனுக்குடன் பூர்த்தி செய்து அனுப்ப போலீசாருக்கு பாஸ்போர்ட் அதிகாரிகள் அறிவுறுத்தினர். அதற்குரிய வசதி இன்னும் போலீஸ் பாஸ்போர்ட் பிரிவில் ஏற்படுத்தாதால், வழக்கம் போல் தபாலிலேயே அனுப்பப்படுகிறது.