/உள்ளூர் செய்திகள்/மதுரை/சவுராஷ்டிரா கல்லூரியில் தன்னாட்சி நிர்ணயக்குழு ஆய்வுசவுராஷ்டிரா கல்லூரியில் தன்னாட்சி நிர்ணயக்குழு ஆய்வு
சவுராஷ்டிரா கல்லூரியில் தன்னாட்சி நிர்ணயக்குழு ஆய்வு
சவுராஷ்டிரா கல்லூரியில் தன்னாட்சி நிர்ணயக்குழு ஆய்வு
சவுராஷ்டிரா கல்லூரியில் தன்னாட்சி நிர்ணயக்குழு ஆய்வு
ADDED : ஜூலை 15, 2011 01:33 AM
திருப்பரங்குன்றம் : மதுரை பசுமலை சவுராஷ்டிரா கல்லூரிக்கு தன்னாட்சி அந்தஸ்து வழங்க, மைசூரு பல்கலை துணை வேந்தர் தாழ்வார் தலைமையில், சென்னை பல்கலை பேராசிரியர் தேவராஜ், எம்.ஒ.பி., வைஷ்ணவ கல்லூரி முதல்வர் நிர்மலா பிரசாத், மதுரை பல்கலை பதிவாளர் ராஜ்ஜியக்கொடி, மதுரை மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் பொன்னாத்தா, ஒருங்கிணைந்த பல்கலை மானிய குழு சர்மா ஆகியோர் கொண்ட குழு கல்லூரி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினர்.
மாணவர்களிடம் கருத்துக் கேட்டனர். வகுப்பறைகள், நூலகம், ஆய்வுக்கூடங்கள் ஆகியவற்றை பார்வையிட்டனர். கல்லூரி முதல்வர் ராம்நாத், தலைவர் ஜெகநாதன், செலயாளர் சிவநாத், பொருளாளர் மோதிலால், ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன், நிர்வாக குழு உறுப்பினர்கள் ரகுநாத், குமரேஷ் உட்பட பலர் வரவேற்றனர்.