Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/தமிழகம்/திருமணத்தை நிறுத்தி காதலனை மணந்த பெண்பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

திருமணத்தை நிறுத்தி காதலனை மணந்த பெண்பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

திருமணத்தை நிறுத்தி காதலனை மணந்த பெண்பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

திருமணத்தை நிறுத்தி காதலனை மணந்த பெண்பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம்

ADDED : ஜூலை 15, 2011 12:44 AM


Google News
வேலூர்: பெற்றோர் ஏற்பாடு செய்த திருமணத்தை நிறுத்தி, காதலனை திருமணம் செய்த பெண், பாதுகாப்பு கேட்டு போலீசில் தஞ்சம் அடைந்தார்.வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கம் அடுத்த ஈச்சந்தாங்கல் கிராமத்தை சேர்ந்தவர் சாமுண்டிஸ்வரி, 20. இவருக்கும், கார்ணாமம்பேட்டை சேர்ந்த செந்தில்குமாருக்கும், நேற்று, திருவலத்தில் உள்ள வசந்தா மண்டபத்தில், திருமணம் நடக்க இருந்தது. காலை 9 மணிக்கு, திருமணம் நடக்க இருந்த நிலையில், மேடைக்கு வந்த மணப்பெண், 'பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை நான் மணக்க மாட்டேன்; என் விருப்பத்துக்கு மாறாக, பெற்றோர் கட்டாய திருமணம் செய்ய உள்ளனர்' என, மைக்கில் தெரிவித்தார். இதனால், திருமண மண்டபத்தில் கூடியிருந்த உறவினர்கள் மத்தியில், பரபரப்பு ஏற்பட்டது.

மண்டபத்தை விட்டு வெளியேறிய சாமுண்டீஸ்வரி, இன்ஜினியரிங் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் காதலன் தாமோதரனை, திருவலத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், மாலை, 4 மணிக்கு திருமணம் செய்து கொண்டார்.தகவலறிந்த உறவினர்கள், மாரியம்மன் கோவிலில் திரண்டு வந்தனர். இதையறிந்த சாமுண்டீஸ்வரி, காதலனுடன் திருவலம் போலீஸ் ஸ்டேஷனில், பாதுகாப்பு கேட்டு தஞ்சம் அடைந்தார். திருவலம் போலீசார், இருதரப்பினரையும் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us