/உள்ளூர் செய்திகள்/திருச்சி/சொத்துத்தகராறில் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண் கைதுசொத்துத்தகராறில் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண் கைது
சொத்துத்தகராறில் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண் கைது
சொத்துத்தகராறில் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண் கைது
சொத்துத்தகராறில் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண் கைது
ADDED : ஜூலை 15, 2011 12:04 AM
மணப்பாறை: மணப்பாறை அருகே ஆறு குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்த சம்பவத்தில் சொத்துத் தகராறால் தன் வீட்டுக்கு தானே தீ வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.
மணப்பாறை அருகேயுள்ள மேலபூசாரிபட்டியில் கடந்த 12ம் தேதி இரவு 11 மணிக்கு அருகருகே இருந்த ஆறு குடிசை வீடுகள் தீப்பற்றி எரிந்ததில் மாருதி ஆம்னி வேன் உட்பட ஏழு லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலானது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மணப்பாறை போலீஸார் விசாரணை செய்து வந்தனர். விசாரணையில், அன்னத்தாய் என்பவர் தனது மகன் சுப்பிரமணிக்கு சொந்தமான இடத்தை செல்லத்துரை என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இதுசம்பந்தமாக அன்னத்தாய்க்கு அவரது உறவினர் மாணிக்கம் மனைவி வேலுத்தாய் என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 'என்னை கேட்காமல் இடத்தை எப்படி விற்கலாம். எனக்கும் அதில் பங்கு உள்ளது' என வேலுத்தாய் அடிக்கடி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் இருவரிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 12ம் தேதி இரவு வழக்கம்போல் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த அன்னத்தாய் இந்த வீடு இருப்பதால்தான் பிரச்னை எனக்கருதி தனது வீட்டிற்கு தானே தீ வைத்துள்ளார். ஆனால், காற்றில் தீ வேகமாக அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவி ஆறு வீடுகள் சாம்பலானது என விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் பொன்.இளஞ்செழியன், அன்னத்தாயை(60) கைது செய்தார்.